Mumbai
Mumbai timepass
Lifestyle

Mumbai : தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க QR Code - மும்பை இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு !

டைம்பாஸ் அட்மின்

தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால் மனித வேலைகள் எளிதாக மாறிவருகின்றன. அந்த வகையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க தற்பொழுது QR குறியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீயோனைச் சேர்ந்த 24 வயதான அக்ஷய் ரிட்லான் என்ற டேட்டா இன்ஜினியர் இந்த கியூ ஆர் குறியீடுடன் கூடிய லாக்கெட்டை உருவாக்கியுள்ளார். இந்த QR குறியீடு அல்சைமர்(Alzheimer), டிமென்ஷியா(Dementia), ஸ்சிசோஃபிரினியா(Schizophrenia), மனஅழுத்தம் போன்ற காரணங்களால் வீட்டை விட்டு காணாமல் போனால் இந்த லாக்கெட்டை அவர்கள் அணிந்திருந்தாள் மிகவும் எளிதாக அவர்களை கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்.

இந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது அதை அணிந்துள்ள நபரின் பெயர், தொடர்பு விபரம், முகவரி, ரத்த பிரிவு போன்றவற்றை எளிதாக அடையாளம் காணலாம். இதன் மூலம் அவர்கள் அவரது குடும்பத்தாருடன் மீண்டும் இணைக்க உதவும்.

இந்த லாக்கெட்டை உடைக்க முடியாத அளவுக்கும், மழை வெயில் போன்ற அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் தயாரிப்பு விலை 200 ரூபாய். ஆனால் இது தற்பொழுது இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முதல் விநியோகம் தொடங்கப்பட உள்ளதாக ரிட்லான் தெரிவித்துள்ளார்.

- ர.ராஜ்குமார்.