நேற்று ரெட் கார்ட் பெற்ற புரட்சித் தளபதி விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ளது மார்க் ஆண்டனி.
கதைச்சுறுக்கம்:
நல்ல உள்ளம் கொண்ட டான் ஆன ஆண்டன் (விஷால்), அவரின் அப்புராணி மகன் மார்க் (விஷால்), வில்லாதி வில்லன் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா), அவரது மகன் ஸ்மால் வில்லன் (எஸ்.ஜே.சூர்யா) ஆகியோருக்கு இடையில் இறந்த காலத்திற்கு பேசும் வகையில் ஒரு போன் என்னென்ன மாயாகாலங்கள் செய்யும் என்பதைப் பேசுகிறது 'மார்க் ஆண்டனி'.
ப்ளஸ்:
எஸ்.ஜே.சூர்யா. வில்லன், வில்லாதி வில்லன், அப்புராணி வில்லன், அன்பான வில்லன் என எல்லா எல்லையிலும் சிக்சர் அடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை.
ஆங்காங்கே ரொறுகப்பட்ட 80ஸ் பாடல்கள். நமக்கு ஒரு ரெட்ரோ மூடை செட் செய்கிறது.
தொய்வில்லாமல் காட்டாறாக ஓடும் திரைக்கதை.
சண்டைக்காட்சிகளும், அதை படமாக்கிய விதமும்.
மைனஸ்:
எங்குமே லாஜிக் இல்லை. கொஞ்சம் திரைக்கதையை உற்று பார்த்தால் ஒன்றரை டன் லாஜிக் ஓட்டைகள் கொட்டிக் கிடக்கிறது. டைம் ட்ராவலா இருந்தாலும் ஒரு லாஜிக் வேண்டாமா?
எந்த பாடலுமே கேட்கும் ரகத்தில் இல்லை.
விஷால். சண்டைக்காட்சிகளில் மாஸ் காட்டும் விஷால் ஏனைய இடங்களில் நடிக்க பெரும்பாடு படுகிறார்.
திருநர்கள், பெண்களை கொச்சைப்படுத்தும் படியான காட்சிகள், வசனங்களை வைத்து முகம் சுழிக்க வைக்கிறார்கள்.
முடிவு:
லாஜிக்குகளை மறந்து, நான் ஸ்டாப் கலகலப்பான எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்டத்தைப் பார்க்க சரியான படம் 'மார்க் ஆண்டனி'.
வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.
Follow us : https://bit.ly/3Plrlvr