Popcorn timepass
Lifestyle

National Popcorn Day : பாப்கார்ன் தடை செய்யப்பட்டது கதை - டாப் 10 சுவாரஸ்யமான தகவல்கள்!

டைம்பாஸ் அட்மின்

சினிமா தியேட்டர் முதல் விஷேச வீடுகள் வரை பாப்கார்ன் இல்லாத இடமே இல்லை. இன்று‌ தேசிய பாப்கார்ன் தினம். அதாவது நொறுக்குத் தீனியைக் கொண்டாட அர்ப்பணிக்கப்பட்ட நாள். பாப்கார்ன் பற்றிய பத்து சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

1. 1890களில் சார்லஸ் கிரெட்டர்ஸ் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் முதல் பாப்கார்ன் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினார்.

2. இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கர்கள் வழக்கத்தைக் காட்டிலும் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாக பாப்கார்ன்களை சாப்பிட்டனர்.

3. உலகின மிகப்பெரிய பாப்கார்னால் ஆன பந்து அமெரிக்காவின் சாக் நகரத்தில் உள்ளது. இது சுமார் எட்டு அடி விட்டமும் 4 டன் எடையும் கொண்டது.

4. பாப்கார்ன் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் 25 மாகாணங்களில் சோளப் பயிர் விளைகிறது.

5. ஒவ்வொரு சோள விதைக்குள்ளும் நீர்த்துளி உள்ளது. உயர் அழுத்தத்தில் அது சூடாகும் போது வெடித்துச் சிதறி பாப்கார்னின்‌ வடிவம் கிடைக்கிறது.

6. பாப்கார்ன்கள் அதன் அமைப்பின் அடிப்படையில் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை வண்ணத்துப்பூச்சி மற்றும் காளான் வடிவமாகும்.

7. உயர் வெப்பம் மற்றும் அழுத்தத்தில் வெடிக்காத விதைகள் 'Old maids' அல்லது 'Spinsters' என அழைக்கப்படுகின்றன.

8. பாப்கார்ன்கள் வெடிக்கும் போது 'பாப்' என சத்தம் கொடுப்பதால், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் 1949 ஆம் ஆண்டு சினிமா தியேட்டர்களில் பாப்கார்னுக்கு தடை விதிக்கப்பட்டது.

9. பாப்கார்னை ஒரு நொறுக்குத் தீனியாகத் தான் நாம் நினைக்கிறோம். ஆனால் 1800களில் அது பால் மற்றும் சர்க்கரையோடு சேர்த்து உணவாக உட்கொள்ளப்பட்டது.

- மு.இசக்கிமுத்து.