Tamil Cinema : 'வேட்டி, காசு பணம், ரோபோ, தோசை மாவு, நாய்' - இதுக்கெல்லாமா பாட்டு போடுவீங்க லிஸ்ட்!

வேட்டி விற்கிற ஜவுளிக்கடைக்கெல்லாம் ஓசியில பப்ளிசிட்டி பண்ண மாதிரி அஜித்தோட விஸ்வாசம் படத்துல பாட்டு வரும். வேட்டி கட்டு, சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேத்துக்கட்டுனு வேட்டிக்கு வக்காலத்து வாங்குவாங்க.
Tamil Cinema
Tamil Cinematimepass

ஹஸ்பெண்டை நாதான்னும், சுவாமின்னு கூப்புட்ட காலத்துலதான் மனைவி காபி கொடுத்தா ஒரு பாட்டு, வெற்றிலை மடிச்சுக் கொடுத்தா பாட்டு, கால்ல கொலுசு மாட்டினா போடுப்பா அதுக்கும் ஒரு பாட்டுன்னு ஹீரோக்கள் பாட்டாப் பாடி பாடாப்படுத்துனாங்க. அந்த காலத்துக்கு அப்புறம், படத்தோட நீளத்தையும், பாட்டையும் குறைச்சாங்க.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல மரத்தை சுத்தி.. சுத்தி வந்து லவ் டூயட் பாடுனாங்க. அப்றம் ஜாலியா ஒரு பாட்டு இருந்தா நல்லா இருக்கும்னு டைரக்டர் ஃபீல் பண்ணி எதுக்கு பாட்டு போடலாம்னு பிரைனை கிரைண்டர் மாதிரி சுத்தவிட்டு, எதுக்கெல்லாம் போட்டிருக்காங்கன்னு சில பாடல்களைப் பார்க்கலாம்.

1 .’எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும் இதில் தப்பில்ல எப்போதும் ஒத்துக்கிடணும்’னு மாவு ஆட்டறதை கொண்டாடுற மாதிரி ஒரு பாட்டு. ’புதுப்புது அர்த்தங்கள்’ படத்துக்காக வெச்சிருப்பாங்க. ஊரைவிட்டு ஓடிவந்த ரகுமானும், சித்தாராவும் ஹோட்டல்ல சாப்பிட்டு காசு கொடுக்க முடியாம சமையல்கட்டுல மாவாட்டிக்கிட்டே பாடுன பாட்டுதான் இது. ரொம்ப புதுசா இருக்கே மாவாட்டுறதுக்கும் கூட ’ஸாங்’ போட்டிருக்காங்களேன்னு ஜனங்களும் சந்தோஷப்பட்டாங்க.

பாலசந்தர் எடுத்த அந்த படமும் கெலிச்சது. படத்தோட ஹீரோவும், ஹீரோயிணியும் மாவு ஆட்டிக்கிட்டே பாட்டும் பாடி, கூடவே ஆட்டமும் ஆடி டிபனுக்கு வந்தவங்க திருப்தியாவும், லன்ஞ்சுக்கு வந்தவங்க சந்தோஷமாவும் போனதால அந்த ஹோட்டல் முதலாளி ’இனிமே நீங்க ரெண்டு பேரும் மாவு ஆட்டுறதை விட்டுட்டு டான்ஸ் மூவ்மெண்ட் போடுங்க’ன்னு மாவு ஆட்டுற டெம்ரவரி ஜாப்புலேர்ந்து சர்வ் பண்ற சர்வர் வேலையில பர்மனெண்ட் பண்ணிருவாரு. அந்த சந்தோஷத்துல ரகுமானும் – சித்தாராவும் இன்னும் நாலு ஸ்டெப் கூடப்போடுவாங்க.

Tamil Cinema
Tamil Cinema : காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

2 . விலங்குகளையும் சும்மா விட்டு வைக்காத நம்ம தமிழ் சினிமா சமூகம் அதுக்கும் ஒரு ஸாங்கை போட்டு விடுவோம்னு பாசத்தை பாடல்ல காட்டுன படம்தான் ’நாய்கள் ஜாக்கிரதை’. அந்தப் படத்துல நாய் கூடவே சுத்திக்கிட்டு இருக்கிற ஹீரோ சிபிராஜ் நாய் தன்கிட்ட வந்ததுலேர்ந்து தன் ஃலைப்புல என்னென்ன சேஞ்சஸ் வந்துச்சின்னு பாடுவாரு பாருங்க.. காதலிக்கு கூட அப்டி ஒரு பாட்டு வந்திருக்குமான்னு தெரியலை.

அதாவது.. ’நீ என் நெஞ்சில் ஏறினாய், என் வாழ்வை நீ மாற்றினாய், உன் காதல் கூறினாய், என் சொந்தம் ஆகினாய்’ னு வரும். நாய்க்கான பாட்டுங்கிறதால பல்லவியில நாய்.. நாய்னு முடிஞ்சா நல்லா இருக்கும்னு எந்த நல்லவரோ ஐடியா கொடுத்திருப்பாரு போல.. அதனால.. நெஞ்சில் ஏறி ’நாய்’, மாற்றி ’நாய்’, ஆகி ’நாய்’ னு வரிகள் வரும்.

அதுவுமில்லாம படத்துல தனக்கு ஒரு பாட்டு வராதான்னு ஏங்கின காமெடி நடிகர்களை காண்டு ஏத்துற மாதிரி நாய்க்கு ஸாங் கொடுத்து வெறுப்பேத்தியிருப்பாங்க. குட்டி பசங்க குதூகலிக்கிற மாதிரி நாய் ஸாங் பண்ணிருந்தாலும் நினைச்ச மாதிரி படம் துட்டு பேறலைங்கிறதுதான் வருத்தம்.

Tamil Cinema
Tamil Cinema : அக்குள்ல வெங்காயம், சின்ன வயசு ஜட்டி, கிழிஞ்ச நோட்டு-Cringe காதல் காட்சிகள் லிஸ்ட் !

3 . மலையாளத்துல சேட்டன்கள் பார்த்து ஹிட்டடிக்கவெச்ச ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை தமிழ்நாட்டுக்குத் தபதபன்னு தூக்கிட்டு வந்து.. அந்தக் கதைய பிரிச்சி மேஞ்சி, பிராண்டி எடுத்த படம்தான் ’கூகுள் குட்டப்பா’. வெளிநாட்டுலேர்ந்து இறக்குமதியான ஒரு குட்டி ரோபோ பற்றின கதை. அந்த கேரளத்து ரோபோவை பேக் பண்ணி நம்மூருக்கு கொண்டுவந்த புண்ணியவான் கே.எஸ். ரவிக்குமார். பட்த்தோட ஹீரோவும் அவர்தான்.

அவரோட உதவிக்காக வந்த ரோபோவைப் புடிக்காம அதோட ஃபேர்பார்ட்ஸை கழட்டி பேரிஞ்சம் பழத்துக்கு போடுற அளவுக்கு கணக்கில்லாத அளவுக்கு காண்டுல் இருப்பாரு. அப்றம் கே.எஸ்.ஆருக்கு அந்த ரோபோ பண்ற ஹெல்ப்பை பார்த்துட்டு பெத்த புள்ளைங்களைவிட இதுவே பெட்டர்னு கூடவே வெச்சி, அது மேல பாசத்தை பங்கு பிரிக்காம மொத்தமா வெச்சிருப்பாரு.

அந்த ரோபோவைப் பற்றின பாட்ட கேட்டா சிலிர்க்கும். ஒரு ரோபோவுக்காக ஸாங்கே கம்போஸ் பண்ணி பாட வெச்சிருப்பாங்க. அதுவும் பாடல் வரிகள் பார்த்திங்கன்னா.. ’கரண்டு கம்பி ரோபோடா.. கலகலப்பாகும் ரோபோட.. துருதுரு உல்லாலா,, செமதான் சொன்ன பேச்செல்லாம் கேக்குது, வெயிட்டெல்லாம் தூக்குது, சைக்கிளும் ஓட்டுது’ ன்னு ரகளையா ரவுண்டு கட்டி ரோபோவைப் புகழ்ந்து ’எந்திரன்’ பட ரோபோவையே பொறாமை பட வெச்சிருப்பாங்க.

Tamil Cinema
Tamil Cinema : இதெல்லாம் ஒரு கதையாம்மா? - தினுசான கதைகளைக் கொண்ட படங்களின் லிஸ்ட் !

4. கரன்சி நோட்டை மையமா வெச்சி சில பாடல்கள் வந்திருந்தாலும் ’காசு பணம் துட்டு மணி மணி’ ன்னு ’சூது கவ்வும்’ படத்துல வந்த இந்தப் பாட்டை மிஞ்சவே முடியாது பிரியாணி விலைய விலைப்பட்டியல்ல பார்த்துட்டு விழிப் பிதுங்கி நிக்கிற மந்திரி மகன் கருணாகரன், தன் அப்பன்கிட்டையே தன்னை கடத்திட்டாங்கன்னு பணம் ஆட்டையப்போட ஆளுங்களை வெச்சி பேரம் பேச, கட்சித் தலைமை தன் கட்சி நிதியிலேர்ந்து மந்திரி மகனைக் காப்பாத்த ரெண்டு கோடி கொடுக்குது.

பட்டன் செல் யூஸ் பண்ணவன் கைல ஆப்பில் போன் கெடைச்ச மாதிரி, நாக்கு வறண்டு சாகக்கிடந்தவன் முன்னாடி தண்ணி லாரி வந்து நின்ன மாதிரி ரெண்டு கோடி பணத்தை வெச்சிக்கிட்டு.. பணம் செலவு பண்ணி, பணத்தை புகழ்ந்து பாடுன பாட்டு அது. காசுக்கெல்லாம் கானா ஸாங்கான்னு ஆச்சர்யப்பட்டாலும் மூணு நிமிஷம் ஏழு செகண்ட் ஓடுற அந்தப் பாட்டுதான் படத்தோட ’ஹய்லைட்’ என்னவோ தெரியலை அந்த பாட்டுக்கு மட்டும் ஆடுன அத்தனை டான்ஸ் கேர்ள்ஸும் அவ்ளோ அழகு. அதோட அவங்க போட்ட மூவ்மெண்டும் கண்ணுலயே நிக்கும்.

Tamil Cinema
Tamil Cinema : 'சொர்ணாக்கா, நீலாம்பரி' - வில்லங்கமான வில்லிகளின் லிஸ்ட் !

5 . வேட்டி விற்கிற ஜவுளிக்கடைக்கெல்லாம் ஓசியில பப்ளிசிட்டி பண்ண மாதிரி ’தல’ அஜித் படமான ’விஸ்வாசம்’ படத்துல ஒரு பாட்டு வரும். இன்னைக்கு இருக்கிற இளைய தலைமுறை பையனுங்க ஜீன்ஸ், சினோஸ், காட்டன் பேண்டுன்னு மாட்டுற அயிட்டமா வாங்கி மாட்டிகிட்டு அலையறப்போ நம்ம கலாச்சார டிரஸ்ஸான வேட்டியோட மகிமைய சொல்ற மாதிரி பாடுன பாட்டுதான் ’வேட்டி..வேட்டி.. வேட்டி கட்டு, சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேத்துக்கட்டு’ ன்னு வேட்டிக்கு வக்காலத்து வாங்குறதுக்காக போடப்பட்ட பாட்டு.

அதனால.. வேட்டி நெய்யிறவங்கலேர்ந்து, வாங்கி சேல்ஸ் பண்றவங்க வரைக்கும் வாட்ஸ்ஸப்புல அந்த பாட்டோட வீடியோவையும், ரிங்டோனா ஆடியோவையும் வெச்சிருக்கிற அளவுக்கு வேட்டிய பேமஸாக்கிவிட்டிருக்கு.

அதுலயும் அஜித் ரசிகருங்க ஒரு பக்கம் ’தல’ யே வேட்டி கட்டச் சொல்லிட்டாருன்னு பொடுசுலேர்ந்து பெருசு வரைக்கும் வேட்டிய சுத்திகிட்டு ’விஸ்வாசம்’ ரிலீசான அந்த வாரம் வரைக்கும் எங்க பார்த்தாலும் வெள்ளையும் சொள்ளையுமாத்தான் சுத்துனாங்க வேட்டிக்கெல்லாம் பாட்டான்னா…கேட்கிறவங்களுக்கு.. ’பொற்காலம்’ படத்துல ’சிங்குசான்.. சிங்குசான் சிவப்பு சேலை சிங்குசான்.. பச்சை சேலை சிங்குசான்னு சேலைக்கு பாட்டு போட்டப்போ வேட்டிக்கும் ஒரு பாட்டு வந்ததால என்ன கொறைஞ்சுப்போச்சி..? வாழ்க.. வேட்டி, வளர்க அதன் புகழ்..

- உத்தமபுத்திரன்.

Tamil Cinema
Tamil Cinema : பாச மலரை மிஞ்சும் அண்ணன் - தங்கை படங்கள் - ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com