சாப்பாட்டு ராமன்
சாப்பாட்டு ராமன் டைம்பாஸ்
Lifestyle

'சாப்பிடும்போது சட்ட போட மாட்டேன்' - நைஜீரியாவில் ஒரு சாப்பாட்டு ராமன்

Zulfihar Ali

நைஜீரியாவைச் சேர்ந்தவர் ஆண்டனி ஒடுஞ்சி. ஆள பார்த்தா டம்மி பீஸ் மாதிரிதான் இருப்பார். ஆனா பயங்கரமான ஆளு. நைஜீரியாவிலேயே பிரபலமான பேஸ்புக் செலிபிரிட்டிகள்ல இவரும் ஒருத்தர். அப்படி என்ன பண்ணிட்டார்னு தானே கேக்குறீங்க?

சாப்பிடுற விஷயத்துல இவர் பல சம்பவங்கள் பண்ணிக்கிட்டு இருக்கார். உணவை சாதாரணமா சாப்பிடாம இவரோட ஸ்டைல்ல விதவிதமா ரசிச்சு, ருசிச்சு, கடிச்சு சாப்பிடுறதாலயே செலிபிரிட்டியா மாறியவர்.

இவர் தட்டுல இருக்குற சாப்பாட்டுக்கும் இவர் உருவத்துக்கும் கொஞ்சம்கூட சம்மந்தமே இருக்காது. எவ்ளோ வெச்சாலும் மனுஷன் அசால்ட்டா உருட்டி உருட்டி உள்ளே தள்ளிட்டே இருப்பார். இன்னொரு முக்கியமான விஷயம் இவர் சாப்பிடும்போது சட்டையே போடமாட்டார்!

ஒருநாள் ஏதேச்சையா இவர் இப்படி சாப்பிடுறத வீடியோவா எடுத்து சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணிருக்காங்க. எதிர்பாராத விதமா வியூஸ் பிச்சிக்கிட்டு போயிருக்கு. அதுல இருந்து இதையே வேலையா பார்க்க ஆரம்பிச்சிட்டார்.

சோஷியல் மீடியா மூலமா வருமானமும் வந்து கொட்ட ஆள் வேறலெவல்ல மாறிட்டார். கையில காசு பணம் வந்ததும் பழைய ஒடுஞ்சிங்கிற பெயரை தூக்கி ஓரமா வெச்சிட்டு Prophet Rolexனு ஸ்டைலா பேர மாத்திக்கிட்டார்.

இப்போ பேஸ்புக்ல மட்டும் இவரை 2.1 மில்லியன் மக்கள் இவரை பின் தொடர்றாங்க. அதுபோக இப்போ இவரோட மொத்த சொத்துமதிப்பு என்ன தெரியுமா? 2,50,000 அமெரிக்க டாலர்கள். இம்புட்டும் சாப்பிட்டே சம்பாதிச்சிருக்கார்!