அசாம் மாநிலத்தில இருக்க பள்ளிகள்ல வேலை பாக்கிற ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் மக்களால ஏற்றுக் கொள்ளாதபடி ஆடை அணியிறதா ஒரு கம்ப்ளைன்ட் வந்திருக்கு. இத கட்டுக்குள்ள கொண்டு வரணும்ன்றதுக்காக அசாம் மாநில அரசு, பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க.
"பள்ளிகள்ல வேலை செய்ற ஆசிரியர்கள் அவங்களுக்கு புடிச்ச மாதிரியான ஆடை அணியுறாங்க. அது சில சமயத்துல மக்களால ஏற்றுக்கொள்ளாதபடி இருக்கு. ஒரு ஆசிரியர் எல்லா விதத்திலும் மாணவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாவும், நல்ல முன்மாதிரியாவும் இருக்கணும், அவங்கள பாத்து தான் மாணவர்கள் ஒழுக்கம்னா என்ன?, எப்படி நடந்துக்கணும்னு கத்துப்பாங்க..
ஆசிரியர்களுடைய ஒழுக்கம், கண்ணியம், தொழில்முறை, தொழில் மேல இருக்க தீவிரதன்மைய பிரதிபலிக்கிற மாதிரியான ஆடைய பயன்படுத்துறது அவசியம்னு" அசாம் மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்புல சொல்லி இருக்காங்க..
கூடவே, கல்வி நிறுவனங்கள்ல ஆசிரியர்கள் எந்த மாதிரியான ஆடை அணியனும், எந்த மாதிரியான ஆடைய தவிர்க்கணும்னு அந்த அறிவிப்பில சொல்லி இருக்காங்க..
அதன்படி, ஆண் ஆசிரியர்கள் எப்பவுமே ஃபார்மல் ஆடைல தான் வரணும், கேஷுவலான டி-ஷர்ட், ஜீன்ஸ் மாதிரியான ஆடைகள அணியக்கூடாது.
பெண் ஆசிரியர்கள் புடவை, சுடிதார் மாதிரியான ஆடைல தான் வரணும். லெக்கின்ஸ், டி-ஷர்ட், ஜீன்ஸ் மாதிரியான ஆடைகள அணியக்கூடாது.
ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் எல்லாருமே லைட் கலர் ஆடைகள் தான் அணியனும். ரொம்ப பளபளக்கற மாதிரியான ஆடைகள அணியக்கூடாது.
ஆசிரியர்களுடைய ஆடை ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் சுத்தமாகவும் இருக்கணும்.
ஆசிரியர்களுடைய ஆடைகள் கேஷுவலாவோ கிராண்டாவோ கண்டிப்பா இருக்கவே கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காங்க.
இந்த ஆடை கட்டுப்பாடுகள கண்டிப்பா எல்லா கல்வி நிறுவனங்களுடய ஆசிரியர்களும் கடைப்பிடிக்கணும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்னு அசாம் பள்ளி கல்வித்துறை அறிவிச்சுருக்காங்க.
அசாம் மாநில ஆசிரியர்களுடைய அப்டேட்டட் ட்ரெஸ் கோட் இதுதான் !!