ramanathapuram timepass
Lifestyle

ராமநாதபுரம் : சாரட்டு வண்டி, மாட்டு வண்டியில் பள்ளிக்கு வந்த குழந்தைகள்!

பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர்.

டைம்பாஸ் அட்மின்

கோடை வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் 12ம் தேதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 14ம் தேதி தொடக்கப் பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 12ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் முதன்முறையாக தொடக்கப் பள்ளியில் காலடி எடுத்து வைத்து, பள்ளிப்படிப்பை தொடங்க இருக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக சாரட் வண்டியிலும், மாட்டு வண்டியிலும் அமர வைத்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தது.

பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த வரவேற்பு பள்ளி குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் மகிழ்ச்சியடைய‌ செய்தது.

- கு.விவேக் ராஜ்.