தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் பாரதிராஜா சினிமாவுக்கு என பிரதியேக பள்ளியை ஆரம்பித்தார். இவரைப் பின்பற்றி, மற்ற தமிழ் இயக்குநர்களும் ஒரு சினிமா பள்ளி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்னு ஒரு 'சின்ன கற்பனை'. மொத மணிரத்னத்த எடுத்துக்கலாம்.
மணிரத்னம் அகாடமி:
இது ஒரு மௌனமொழிப் பள்ளினு சொல்லலாம். ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு ரயில் ஓடும். கண்டிப்பா எல்லாப் பசங்களும் தினமும் அந்த ரயில்ல ஒரு ரவுண்டு வரணும்.
அப்பப்போ இந்த ஸ்கூலில் மட்டும் மழை பெய்யும். ஆனால் லீவ் விட மாட்டாங்க. இங்கே வைக்கிற சாதாரண டெஸ்ட் ஆகட்டும் பப்ளிக் எக்ஸாம் ஆகட்டும் எல்லாமே ஒன் -வேர்ட் ஆன்ஸர் கொஸ்டீன்தான்.
ரொம்ப அதிகமா வெளிச்சம் இல்லாத பள்ளிங்கிறதனால பவர் பிரச்னை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது இங்கே!
எல்லா க்ளாஸ்லயும் அரவிந்சாமியும், மாதவனும்தான் வாத்தியாரா இருப்பாங்க. தமிழ் வாத்தியாரா வைரமுத்துவும், ம்யூசிக் டீச்சரா ரகுமானும் இருப்பாங்க.
வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் சினிமா விமர்சனங்களைப் படிக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.
Please Click : https://bit.ly/3Plrlvr