Jadeja
Jadeja Timepass
Lifestyle

Jattu என்ற Jadeja-வுக்கு தடை வந்த கதை தெரியுமா? | IPL season16 | 2023

டைம்பாஸ் அட்மின்

தல தோனியும் சின்னத் தல ரெய்னாவுக்கும் அடுத்தபடியா அதிகமான ரசிகர்கள தனக்காக சேர்த்து வச்சிருக்க தளபதிதான் ரவீந்திர ஜடேஜா!!!!

சிஎஸ்கேவோட வெற்றி நரம்புகள் பலமுறை இவரோட பேட்டாலயும் பந்தாலயும் மீட்டப்பட்டிருக்கு. இவர் இருக்க வரை எந்தப் போட்டியிலும் சிஎஸ்கேவிற்கு எண்ட் கார்டே போட முடியாது. உள்ளே புகுந்தா ஏதோ ஒரு வகையில இவரோட தாக்கம் இருந்துட்டே தான் இருக்கும். அப்படிப்பட்ட ஜடேஜா ஐபிஎல் ஆட முடியாதவாறு ஒரு வருஷம் தடைக்கு உள்ளான கதை தெரியுமா?

30000 டாலருக்கு 2008-ம் ஆண்டுலேயே ராஜஸ்தானால வாங்கப்பட்டாரு ஜடேஜா. அண்டர் 19 அணில அவரோட செயல்பாடுகளால கவரப்பட்டு அவரை அணிக்கு உள்ள கொண்டு வந்துடுச்சு ராஜஸ்தான் ராயல்ஸ். வார்னே கேப்டன்ஷிப் பண்ணி கோப்பை வாங்கித் தந்த அணில இருந்த தன்னோட வீரரான ஜடேஜாவ ரொம்பவே கொண்டாடுவாரு. ஸ்டார் பிளேயரா ஜடேஜா உருவாகுவார்னும் பலமுறை வார்னே சொல்லிட்டே இருந்திருக்காரு. ஜடேஜாவோட ராஜஸ்தானோட காண்ட்ராக்ட் ரெண்டு வருஷத்துல முடிவுக்கு வந்துச்சு.

ராஜஸ்தான் நாட்கள் போரடிக்க அந்த ஒப்பந்தம் முடிஞ்சதும் வேற அணிக்கு போக ஜடேஜா முடிவெடுத்தார். அவருக்கான மார்க்கெட் மதிப்பு கூடியதும் ஒரு காரணமா இருந்துச்சு. மும்பை இந்தியன்ஸ் அவரோட சாய்ஸா இருந்தாங்க. வெளில போயே ஆகனும்னு துடிச்சுட்டு இருந்தவரு உடனே அதுக்கான முயற்சில இறங்குனாரு. ஆனா அங்கதான் ஒரு மிகப்பெரிய தவறை ஜடேஜா செஞ்சுட்டாரு.

ஐபிஎல்லைப் பொறுத்தவரை பிசிசிஐ தான் அதுக்காக ரூல்ஸ முடிவு பண்றவங்க. அவங்களோட ரூல்படி எந்த ஒரு அணில வேணும்னாலும் ஏலம் எடுக்கப்படற வீரர்கள் இருக்கலாம். அதேநேரம் ஏற்கனவே ஒரு அணில இருக்காங்கன்னா அந்த அணி நிர்வாகம் ரிலீஸ் பண்ணாம வீரர்களாகவே வேறு எந்த அணிலையும் போய் தாங்களாகவே இடம் பெறக் கூடாது. இந்த இடத்தில்தான் ரூல்ஸ ஜடேஜா மீறிட்டாரு. அவராகவே மும்பை இந்தியன்ஸ் அணியை சார்ந்தவங்களப் பார்த்து இதப் பத்தி பேச ஆரம்பிச்சாரு.

இந்த விஷயம் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மட்டுமல்ல பிசிசிஐ-க்கும் தெரிய வந்துச்சு. கடுப்பாய்ட்டாங்க ரெண்டு பேரும். ரூல்ஸ மீறிட்டாருன்றத காரணம் காட்டி 2010-ம் ஆண்டு ஆடுறதுத்கு பிசிசிஐ ஜடேஜாவுக்கு தடை விதிச்சது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் ஆகிய அத்தனை துறைலையும் அவரோட முப்பரிமாணத்தையும் மிஸ் பண்ணுச்சு.

இதுக்கடுத்து கம்பேக் கொடுத்தப்போ 2011ல கொச்சி டஸ்கர்ஸ் கூட இருந்தாரு ஜடேஜா. 2012லயே அவருக்கும் சிஎஸ்கேவுக்குமான அற்புதமான அந்த பூர்வ ஜென்ம பந்தம்லாம் சேர்ந்து 9.2 கோடிக்கு சிஎஸ்கேவை அவர வாங்க வச்சுடுச்சு. சிஎஸ்கேவோட தடை காலத்துல குஜராத் லயன்ஸோட இருந்தவரு மறுபடி அணி புதுசா கட்டமைக்கப்படறப்போ சிஎஸ்கேவோட கூடாரத்தில வந்து சேர்ந்துட்டாரு. ஆக மொத்தம் அந்த ஒரு வருஷம் மட்டும்தான் ஜடேஜா ஐபிஎல் களத்துல ஆடல.

கேப்டனாக அவரை முயற்சி செய்து அதனால சில பிரச்சினைகளையும் மனஸ்தாபங்களையும் சிஎஸ்கே - ஜடேஜா சந்திச்சாங்க. இருந்தாலும் மத்தபடி அந்த பந்தம் அப்படியேதான் தொடருது.