Red Wine Red Wine
Lifestyle

Portugal : சாலையில் ஓடிய Red Wine வெள்ளம் - சுவாரஸ்ய பின்னணி !

இந்த விபத்தில் 2.2 மில்லியன் லிட்டர்கள் அளவுக்கு சுமார் 2,933,333 மது பாட்டில்களை நிரப்ப தேவையான அளவு ஒயின் சுமார் 2,000 மக்கள் வசிக்கும் நகரத்தின் தெருக்கள் வழியாக ஆறு போல ஓடியது.

டைம்பாஸ் அட்மின்

போர்ச்சுகலில் உள்ள சாவ் லோரென்சோ டி பைரோ (Sao Lorenzo de Bairro) என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் சிவப்பு ஒயின் ஆறு ஓடத் தொடங்கியது. போர்ச்சுகீசிய நகராட்சியான அனாடியாவில் உள்ளூர் ஒயின் ஆலையில் இரண்டு மது தொட்டிகள் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 2.2 மில்லியன் லிட்டர்கள் அளவுக்கு சுமார் 2,933,333 மது பாட்டில்களை நிரப்ப தேவையான அளவு ஒயின் 2,000 மக்கள் வசிக்கும் நகரத்தின்  தெருக்கள் வழியாக ஆறு போல ஓடியது. இந்த விபத்து காரணமாக வெளியேறிய ஒயின் அளவு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் நீச்சல் குளத்தை நிரப்பு அளவிற்கானது என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுசூழல் சீற்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் செர்டிமா ஆற்றில் இந்த மதுவால் மாசுபடுவது குறித்து குடியிருப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள். இருப்பினும், உள்ளூர் தீயணைப்புத் துறையினர் ஒயின் வெள்ளத்தைத் தடுத்து, அருகிலுள்ள வயலுக்குத் திருப்பி விட்டனர்.

இந்த நிலையில், இரண்டு தொட்டிகளுக்கும் சொந்தமான டெஸ்டிலேரியா லெவிரா நிறுவனம் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவத்திற்கும் அதன் விளைவாக ஏற்பட்ட சேதத்திற்கும் மன்னிப்பு கேட்டுள்ளது. கசிவால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் ஒயின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

"சேதத்தை சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்ப்பது தொடர்பான செலவுகளுக்கு நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்கிறோம், உடனடியாக அதைச் செய்யவதற்க்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று நிறுவனம் பதிவில் தெரிவித்தது.

இதேபோன்ற சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினின் வில்லாமலேயில் உள்ள போடேகாஸ் விட்டிவினோஸ் ஒயின் ஆலையில்  நடந்தது. ஆனால் அந்த நேரத்தில் வெறும் 50,000 லிட்டர்கள் ஒயின் மட்டுமே வெளியேறியது.

- மு.குபேரன்.