வேட்டி அணியும் விழா : அழைப்பிதழ் அடித்து அலறவிட்ட செங்கல்பட்டு இளைஞன் !
பெண் பிள்ளைகளுக்கு பருவமடைந்த பிறகு பூப்புனித நீராட்டு விழா என்று நடத்தி மொய்யை கலக்ட் பண்ணுவாங்க. ஆனால், ஆண் பிள்ளையை மட்டும் பெற்றவர்கள் அது மாதிரி விசேஷம் எதுவும் வைக்க மாட்டாங்க. ஆகவேதான் நம்மாளு அடிச்சாரு பாருங்க ஒரு போஸ்டர். அது எதுக்குனா "வேட்டி அணியும் விழா'வுக்கு. இனி அடுத்தடுத்து கைலி அணியும் விழா, முழு பேண்ட் அணியும் விழா என்று தொடரலாம்..
அந்த பத்திரிகைல என்ன போட்ருக்குனா, "வேட்டி அணியும் விழா அழைப்பிதழ்
அன்புடையீர்...
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம், 07-ஆம் தேதி (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 6.00 மணிக்குமேல் 7.30 மணிக்குள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வசிக்கும் திரு.S.வெங்கடேஷ் - ஹரிப்பிரியா வெங்கடேஷ் அவர்களின் புதல்வன் V.வெங்கடவினய் க்கு வேட்டி அணியும் விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் மாமல்லபுரம் வெண்புருஷம் சாலை, ஐந்து ரதம் அருகில் அமைந்துள்ள VV Convention Center ல் நடைபெறும் விழாவிற்கு தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து வாழ்த்திட அன்புடன் அழைக்கின்றோம்.
அழைத்து மகிழும்
S.வெங்கடேஷ் - ஹரிப்பிரியா வெங்கடேஷ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சப்ளையர்ஸ், மாமல்லபுரம்." என்று எச்சடிச்சுருக்கார்.