Robot
Robot  Robot
Lifestyle

'இது என்னடா Robot க்கு வந்த சோதனை' - இன்டர்நெட்டை கலக்கும் Cute Video !

ராதிகா நெடுஞ்செழியன்

இன்னிக்கு இருக்க தொழில்நுட்ப வளர்ச்சியினால எந்த பக்கம் திரும்பினாலும் Artificial intelligence, Roboticsலதான் உலகம் போயிட்டு இருக்கு. எல்லாத்துக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், எங்க திரும்பினாலும் ரோபோட்‌‌..

அமெரிக்கா, அர்லாண்டோ பகுதியில "யூ அண்ட் மி ஹாட் பாட்" (U & Me hot pot) அப்படின்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு. இந்த ரெஸ்டாரண்ட்டுக்கு வர வாடிக்கையாளர்கள கவனிக்கிறது ரோபோட் தான். எந்திரன் படத்துல சிட்டிக்கு Emotionனா என்னனு புரிய வைக்க வசீகரன் எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்பாரு.. கடைசியில சிட்டிக்கு கோவம் வந்துரும்.‌ அத பாத்து ஐஸ்வர்யா ராய் "சிட்டிக்கு கோவம் வருது!"னு சொல்லியிருப்பாங்க.‌ அந்த மாதிரியான ஒரு சம்பவம் தான் இந்த ரெஸ்டாரண்ட்ல நடந்திருக்கு.

ரோபோட்ட ஒரு வாடிக்கையாளர் வழிமறச்சதால அந்த ரோபோட் வருத்தப்பட்டிருக்கு.. U&Me hot pot ரெஸ்டாரண்ட்ல இருக்க இந்த ரோபோடோட பேரு Peanut. வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்றதுக்காக போயிட்டு இருந்த ரோபோட்ட வழிமறிச்ச ஒரு வாடிக்கையாளர்கிட்ட "தயவுசெய்து என்னை தடுக்காதீங்க !! நான் என்னோட வேலைய செய்யணும் !! இல்லனா என்ன வேலையிலிருந்து எடுத்துடுவாங்க !!" "Don't block my way.. please.. I have to work.. otherwise I will be fired "அப்படின்னு சொல்லி இருக்கு.

ரோபோட் பேசுனத வீடியோ எடுத்து முதல்ல டிக் டாக்ல பதிவிட்டு இருக்காங்க. அப்புறமா இன்ஸ்டாகிராம்ல பதிவிட்டு இருக்காங்க‌. இந்த வீடியோ இன்டர்நெட்ட கலக்கிட்டு இருக்கு.

ரோபோட்டுக்கு வேலை மேல அவ்வளவு ஆர்வமா ? இல்ல, முதலாளி மேல அவ்வளவு பயமானு தெரியல ! இப்படி பேசி இருக்கு. இத வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம்ல பதிவிட்டதனால, இந்த Peanut ரோபோட், கூடவே U&Me hot pot ரெஸ்டாரண்ட்டும் அர்லாண்டோ பகுதியில கவனத்த பெற்றிருக்கு. Peanut ரோபோட், ஒரே நைட்ல ஓஹோன்னு ட்ரெண்ட் ஆயிடுச்சு.