உ.பி., டைம்பாஸ்
Satire

நாரையுடன் வாழும் உ.பி., இளைஞர் - வைரலாகும் வீடியோ !

எங்க வீட்ல ஒரு ஆளா அது மாறிடுச்சு எங்க வீட்ல நாங்க என்ன சாப்பிடுறோமோ அதைத்தான் இப்போ நாரையும் சாப்பிடுது பருப்பு ரொட்டினா அதுக்கு ரொம்பவே பிடிக்குது.

Zulfihar Ali

அட நாரப்பயலேனு வடிவேல் சொல்ற மாதிரி உத்திர பிரதேசத்துல ஒருத்தர் உண்மையாவே ஒரு நாரைகூட வாழ்ந்துக்கிட்டு இருக்கார்.

உத்திரபிரதேச மாநிலம் மன்காங்கிற கிராமத்துல வாழ்ற முஹம்மது ஆரிஃப்தான் அவர். ஒரு நாரை ஒருவருசமா இவர் கூட ஒண்ணுமண்ணா சுத்திக்கிட்டு இருக்கு அந்த பத்தி ஆரிஃப் என்ன சொல்லிருக்காருன்னா, "ஒரு வருசத்துக்கு முன்னால என்னோட தோட்டத்துல ஒரு நாரை அடிபட்டு கிடந்துச்சு. அதோட கால் உடைஞ்சி ரத்தம் வந்துட்டு இருந்துச்சு. அதை பார்க்கவே ரொம்ப பாவமா இருந்துச்சு உடனே நான் அதை மெதுவா பிடிச்சு காயத்துக்கு மருந்து போட்டு விட்டேன்.

சரியா நாப்பத்தஞ்சே நாள்ல அதோட கால் நல்லா குணமாகிடுச்சு. கால் சரியானதும் அது கிளம்பிடும்னு நினைச்சேன். ஆனால், அப்படி நடக்கல அது நடக்க ஆரம்பிச்சதும் என் கூடவே இருக்க ஆரம்பிச்சிடுச்சு.

போகப்போக எங்க வீட்ல ஒரு ஆளா அது மாறிடுச்சு எங்க வீட்ல நாங்க என்ன சாப்பிடுறோமோ அதைத்தான் இப்போ நாரையும் சாப்பிடுது பருப்பு ரொட்டினா அதுக்கு ரொம்பவே பிடிக்கிது. இதை நான் அடைச்சு வைக்கிறது கிடையாது. எந்நேரமும் அது சுதந்திரமாதான் சுத்திட்டு இருக்கு.

பகல் நேரங்கள்ல அதோட கூட்டத்தோட சேர்ந்து இருக்கும்
சாயந்தரம் ஆனதும் எங்க வீட்டுக்கு வந்திடும்.

நான் பைப் ஓட்டிட்டு போனா என் கூடவே பறந்து வரும். அஞ்சாறு கிலோமீட்டர் வரைக்கும் விடாம துரத்தி வரும். என் வாழ்க்கையில இப்படி ஒரு உறவு கிடைக்கும்னு நான் சாத்தியமா எதிர்பார்க்கலே"னு சொல்கிறார் ஆரிஃப்.  

நன்றியுள்ள நாரயா இருக்கேப்பா...