German : வதந்தி பட பாணியில் ஒரு கொலை வழக்கு !

ஷஹ்ரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை வைத்து தேடியுள்ளனர்.
German
German timepass

ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்துள்ளார்.

ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மாடல் அழகி ஷஹ்ரபான். ஈராக் வம்சாவளியான இவர் இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி பிரபலமானவர். திருமாணமாகி விவாகரத்து பெற்ற மாடல் அழகியான ஷஹ்ரபான் 24 வயதான ஷேகிர் கே என்ற இளைஞரை காதலித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷஹ்ரபான் தனது பெற்றோரிடம் தான் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

German
LCU : Thalapathy 67 இல் Vijay-வுடன் விக்ரம் Fahadh Faasil ? | Lokesh Kanagaraj

இதுகுறித்து ஷஹ்ரபானின் பெற்றோர் அளித்த புகாரில் மாயமான ஷஹ்ரபானை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் ஷஹ்ரபானின் காரை கண்டுபிடித்த போலீசார் காரில் ஒரு இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.

காருக்குள் இறந்த நிலையில் இருந்த உடல் அச்சு அசலாக ஷஹ்ரபான் போலவே இருந்ததால் அது ஷஹ்ரபான் என்று அவரது பெற்றோர் கூறியதால், போலீசார் அந்த உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இந்த கொலைக்கான காரணத்தை விசாரிக்க தொடங்கினர்.

இதற்கிடையில் அதிர்ச்சியூட்டும் விதமாக  பிரேதபரிசோதனையில் காருக்குள் பிணமாக கிடந்தது ஷஹ்ரபான் இல்லை. கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்த 23வயதான மற்றொரு மாடல் அழகியான கதீட்ஜா  என்பதும் தெரியவந்தது. கதீட்ஜா எப்படி கொலை செய்யப்பட்டார்? அவரது உடல் ஷஹ்ரபானின் காருக்குள் எப்படி வந்தது? ஷஹ்ரபான் சாகவில்லை என்றால் அவர் எங்கே? என்ற பல கேள்விகள் போலீசாருக்கு எழுந்தன. இதுப்பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரணையிலும் எதுவும் தெரியவில்லை.

German
தொடர்: பழைய பேப்பர் கடை - 'கென்யக் காடு, மர உச்சியில் தேனிலவு, இளவரசி எலிசபெத்'

இந்த சம்பவம் நடந்த 6 மாதத்துக்கு பிறகு இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக மாயமான மாடல் அழகி ஷஹ்ரபான் இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை பயன்படுத்தியது  தற்போது போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது.

மாடல் அழகி ஷஹ்ரபான் குடும்ப பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நாடகமாட முடிவு செய்து அதற்கு தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், போலீசாரையும் நம்ப வைக்க காதலனுடன் சேர்ந்து  திட்டம் திட்டியுள்ளார். அவர்கள் இருவரும் ஷஹ்ரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகளை வைத்து தேடியுள்ளனர்.

அப்போதுதான் மாடல் அழகி கதீட்ஜா, ஷஹ்ரபானின் வலையில் சிக்கினார். கதீட்ஜாவுடன் இன்ஸ்டாகிராமில் சகஜமாக பேசி பழகிய ஷஹ்ரபான் அவருக்கு அவ்வப்போது அழகுசாதன பொருட்களை வழங்கி வந்துள்ளார்.  அப்படி ஒரு நாள் அழகு சாதன பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை ஷஹ்ரபான் நேரில் அழைத்துள்ளார்.

அதை நம்பி சென்ற கதீட்ஜாவை ஷஹ்ரபான் மற்றும் அவரது காதலர் ஷேகிர் காரில் அழைத்து சென்று யாருமில்லாத வனப்பகுதியில் காருக்குள் வைத்து கதீட்ஜாவை இருவரும் குத்திக்கொலை செய்து முகம் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஷஹ்ரபான், கதீட்ஜாவின் முகத்தில் 50க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்துள்ளார். பின்னர் ஷஹ்ரபானும், அவரது காதலரும்  கதீட்ஜாவின் உடலை காரில் வைத்து காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர். 

இந்த கொலை சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு தற்போது உண்மை தெரிய வந்ததால் போலீசார் ஷஹ்ரபானையும், அவரது காதலரையும்  கைது செய்துள்ளனர்.

German
China : கோடிகளில் போனஸ் - கொண்டாட்டத்தில் ஊழியர்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com