ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு தீவிற்குள் திடீரென ஆயிரக்கணக்கான காகங்கள் நுழைந்து ஆக்கிரமித்துள்ளதைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருக்கிறது.
ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது ஹோன்சு தீவு. அத்தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த நிகழ்வானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஹோன்சு தீவின் தெருக்களிலும், வீடுகளிலும் ஆயிரக்கணக்கான காகங்கள் கரைந்துக்கொண்டே சுற்றி வந்திருக்கின்றன. கார்கள் மீதும் வீட்டுச் சுவர்கள் மீது கூட்டம் கூட்டமாக காகங்கள் அமர்ந்துள்ளன. இந்த வருகைக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. மர்மமான முறையில் காக்கைகள் கூடும் வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.