மும்பை
மும்பைtimepass

மும்பையில் மாயமான சரக்கு ரயில் : ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்ன?

ரயில் நாசிக்கிலிருந்து, மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கசாரா என்ற பகுதிக்கு அருகிலுள்ள ஓம்பர்மாலி என்ற இடத்தில் திடீரென காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் ஒன்று மாயமானது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து பிப்ரவரி 1 ஆம் தேதி சரக்கு ரயில் ஒன்று 90 கன்டெய்னர்களுடன் மும்பை வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலானது 4, 5 நாள்களில் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் துறைமுகத்துக்கு வந்து சேரவில்லை என்பதுதான் இந்த குழப்பத்திற்கு காரணமே.

Rajesh
மும்பை
Lovers Day : காதலிக்கு பரிசு வாங்க ஆடு திருட்டில் இறங்கிய காதலன்கள் !

ரயில்வே தரப்பில் இருந்து காணும் பொழுது, அந்த சரக்கு ரயிலை ரயில்வே அதிகாரிகள் நாசிக் வரை கண்காணித்து வந்திருக்கிறார்கள். அதன் பின் அந்த ரயில் நாசிக்கிலிருந்து, மும்பையில் உள்ள கல்யாண் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கசாரா என்ற பகுதிக்கு அருகிலுள்ள ஓம்பர்மாலி என்ற இடத்தில் திடீரென காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து மறைந்துவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ரயிலின் இருப்பிடத்தை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பொதுவாக, இந்தியன் ரயில்வே சரக்கு ஆபரேஷன் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் என்ற துறையானது சரக்குகளை எடுத்துச்செல்லும் கன்டெய்னர் ரயில்களைக் கண்காணிக்கும். அத்துறையிடமிருந்துதான் இந்த சரக்கு ரயில் காணாமல்போய்வுள்ளது. அந்த சரக்கு ரயிலில் உள்ள கன்டெய்னர்களில் ஏற்றுமதிக்காக அரிசி, பேப்பர் பொருள்கள், ரசாயானம் போன்ற பொருள்கள் கொண்டுவரப்பட்டன. சரக்கு ரயில் காணாமல்போனதால் ரயில்வே அதிகாரிகள், ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி கிளியரிங் ஏஜென்ட்டுகள் செய்வதறியாது திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

மும்பை
ரஷ்யா பெண்ணையும் தஞ்சாவூர் இளைஞரையும் இணைத்த காதல் ! | Lovers Day

இந்த விவகாரம் குறித்து ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், "ரயில்வே அதிகாரிகளின் கவனக்குறைவால், நாங்கள் சிரமத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கன்டெய்னர்கள் என்னவானது என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். பொருள்கள் சரியான நேரத்தில் சென்றடையவில்லையெனில், ஏற்றுமதியும் எதிர்காலத்தில் பாதிக்கப்படும்" என்று தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கன்டெய்னர் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவின் மேலாளர் சந்தோஷ் குமார் பேசுகையில், "சரக்கு ரயில் காணாமல்போனது உண்மைதான். ரயிலை கண்டுபிடிக்க முயன்றுக்கொண்டிருக்கிறோம். சில தவறுகள் காரணமாக ரயிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. கன்டெய்னர் கார்பரேஷனும், ரயில்வேயும் இணைந்து ரயிலை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

மும்பை அருகில்தான் கசரா இருக்கிறது. நாசிக்கிலிருந்து சில மணி நேரத்தில் மும்பை வந்துவிட முடியும். அப்படி இருந்தும் ரயில்வே அதிகாரிகளால் எப்படி சரக்கு ரயிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அனைவருக்கும் வியப்பாகவே இருக்கிறது.

மும்பை
German : வதந்தி பட பாணியில் ஒரு கொலை வழக்கு !

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com