Virat Kohli  டைம்பாஸ்
Lifestyle

Trend ஆகும் We Are Pregnant கலாச்சாரம் - Virat Kohli முதல் Basil Joseph வரை !

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தங்களது குழந்தையை வரவேற்கும் வகையில், "வி ஆர் 3" (நாங்கள் இனி மூவர்) என்னும் கேப்ஷன் கொடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்கள்.

டைம்பாஸ் அட்மின்

ஒரு சில வருடங்களுக்கு முன்பு மனைவி கருவுற்றிருந்தால் எனது மனைவி கருவுற்று இருக்கிறார் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் இப்பொழுது வி ஆர் பிரக்னண்ட் (We Are Pregnant) என்ற ஸ்லோகன் பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் பிரபலமாக வருகிறது.

திருமணம் ஆன பின் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்துகையில் இது என் கணவர் இது என் மனைவி என்று அறிமுகப்படுத்துவார்கள். ஒரு பெண் தாய்மை அடைந்த பின் என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்றுதான் எந்த ஒரு ஆணும் சொல்வார்கள். ஆனால் இப்பொழுது அந்த ட்ரெண்ட் மாறி நாங்கள் கருவுற்று இருக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு சமூக அக்கறையோடு செயல்படுகின்றனர் பிரபல ஜோடிகள்.

தாய்மை எனப்படுவது ஒரு பெண் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயம் அல்ல. அதால் நாங்கள் இருவரும் சேர்ந்து கருவுற்றிருக்கிறோம் என்று சொல்வது சமூக அக்கறையோடு ஒன்றி இருப்பதாக இருக்கிறது.

முதலாவதாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா, இருவரும் தங்களது குழந்தையை வரவேற்கும் வகையில் ஒரு பதிவை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டிருந்தனர். அதில் "வி ஆர் 3" (நாங்கள் இனி மூவர்) என்னும் கேப்ஷன் கொடுத்து பதிவிட்டு இருந்தார்கள்.

இதேமாதிரி பசில் ஜோசப் சமீபத்தில் தனது மனைவியுடனான மேடர்நிடி புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில், "எங்கள் குழந்தை தேவதை ஹோப் எலிசபெத் பாசிலின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி. அவள் ஏற்கனவே எங்கள் இதயங்களை வென்றாள். அவள் வளர்வதையும் அவளிடமிருந்து ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும் அனுபவிக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்று கேப்ஷன் எழுதியிருந்தார்.

முன்பெல்லாம் குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையை வளர்ப்பது, பேணி காப்பது, பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற அனைத்து வேலைகளையும் தாய்மார்கள்தான் செய்வார்கள். அதனால்தான் என்னவோ ஒரு ஜோடி தங்களது குழந்தையை வரவேற்கும் பொழுது என் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்று மொத்த பொறுப்பையும் மனைவி மீது செலுத்தியிருந்தார்கள்.

ஆனால், இப்பொழுது ஆண்களும் சரி பெண்களும் சரி இருவருமே வேலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இருவருக்கும் வெவ்வேறு விதமான பொறுப்புகளும் கடமைகளும் இருக்கிறது. எனவே இருவருமே பகிர்ந்து கொண்டு எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கருவுற்று இருப்பதையும் இருவராக சேர்ந்து அனுபவிக்கிறார்கள். அந்த வகையில் "வி ஆர் பிரகனண்ட்" என்ற ஸ்லோகன் சமீபகாலமாக மிகவும் பிரண்ட் ஆகி வருகிறது.

இந்த மாதிரியான விஷயங்களை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல் விதவிதமான அழகான வித்தியாசமான புகைப்படங்களாகவும் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் பிரபலங்கள். வார்த்தைகள் வேகமாக செல்லாத போதும் இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தி இருக்கிறது.

குடும்ப பொறுப்புகளில் மட்டும் பங்கு எடுத்துக் கொள்ளாமல் குழந்தை பெறுதல், குழந்தை வளர்ப்பு போன்றவற்றிலும் சம அளவு பங்கு ஆண்களும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

- நெ.ராதிகா