போதை ஆசாமி
போதை ஆசாமிடைம்பாஸ்

'ATMல காசே வரல. பஸ்ஸூ எதுக்கு' - பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி!

"ஏ.டி.எம் மெஷினில் பணமே இல்லாதபோது எங்க ஊருக்கு பஸ் எதுக்கு. பஸ்ஸூ கண்ணாடியை அடிச்சு உடச்சிடுவேன்" என போதை ஆசாமி வீர வசனம் பேசியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், அரசூர் அருகே உள்ள ஆனத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். தன்னிடம் காசு இல்லாததால் தனியார் ஏ.டி.எம் ஒன்றில், தனது ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்றிருக்கிறார். அந்த இயந்திரத்தில் பணமில்லை என தெரியவர, போதையில் இருந்த அவர், அரசூர் - பண்ருட்டி சாலையில் கூச்சலிட்டபடி அவ்வழியாக செல்வோரை வழிமறித்து தகராறு செய்து செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தை வழிமறித்து, ரகலையில் ஈடுபட்டுள்ளார். ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் போதை ஆசாமியின் வாக்குவாதம் நீண்டு கொண்டே செல்ல பயணிகள் கீழே இறங்கி அந்த அலப்பறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஏ.டி.எம் மெஷினில் பணமே இல்லாதபோது எங்க ஊருக்கு பஸ் எதுக்கு. பஸ்ஸூ கண்ணாடியை அடிச்சு உடச்சிடுவேன்" என போதை ஆசாமி வீர வசனம் பேச, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அரசு பேருந்து ஓட்டுநர், "எங்கே கண்ணாடியை உடையேன் பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்து போயுள்ளார் அந்த போதை ஆசாமி நாகராஜ். 'எங்க, இந்த சூனா பானா கிட்டியே சவாலா... ஓங்கி அடிச்சா 1.5 டன் வெயிட்டு பாக்குறியா...' என்ற தொனியில் ஒற்றை கையால் பேருந்து கண்ணாடியை ஓங்கி அடித்தார். இதில், பலத்த சத்தத்துடன் பேருந்து கண்ணாடி கற்கண்டு போல சல்லி சல்லியாக உடைந்து சிதறியது.

இதில், பலத்த சத்தத்துடன் பேருந்து கண்ணாடியானது கற்கண்டு போல சல்லி சல்லியாக உடைந்து சிதறியது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ், அந்த போதை ஆசாமியை அலேக்காக தூக்கிச் சென்றுவிட்டது.

- அ.கண்ணதாசன்

போதை ஆசாமி
Viral Video : சாக்கு பையில் தைத்த பேண்ட் - விலை எவ்வளவு தெரியுமா?

Related Stories

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com