Vietnam  timepass
Lifestyle

Vietnam : 60 வருஷமா தூங்காத முதியவர்! - காரணம் தெரியாமல் குழம்பும் டாக்டர்கள் !

1955-1975 வரைக்கும் வியட்னாம்ல போர் நடந்திருக்கு. அதனால ஏற்பட்ட PTSD அதாவது 'போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஸாடர்'னால இவருக்கு இந்த தூக்கமின்மை வந்துருக்கலாம்னு மருத்துவர்கள் சந்தேகிக்குறாங்க.

ராதிகா நெடுஞ்செழியன்

இளைஞரா இருக்கும்போது ஒரு காய்ச்சல் வந்துருக்கு. அந்த காய்ச்சல் வந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட 60 வருஷமா தூங்காம முழிச்சே இருக்காரு ஒரு முதியவர்.

வியட்நாம்ம சேர்ந்த 81 வயது முதியவர்தான் தாய் என்காக். இவர் பிறந்தது 1942வது ஆண்டு. கிட்டத்தட்ட அவருடைய 20 வயதிலிருந்து இவர் தூங்கல. அதாவது 1962ஆம் ஆண்டிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அவர் தூங்கினதே இல்லையாம். 60 வருஷத்துக்கும் மேல தூங்காத இவருக்கு உடல் நலமோ மனநலமோ கொஞ்சம்கூட பாதிக்கலன்றதுதான் ஆச்சரியமான விஷயம். அவருடைய 20 வயதுல அவருக்கு ஒரு காய்ச்சல் ஏற்பட்டிருக்கு. அந்த காய்ச்சல்ல இருந்து தான் அவரால தூங்க முடியலனு சொல்றாரு.

தாய் என்காக் உடலளவுளயும் மனதளவுளயும் ரொம்ப ஆரோக்கியமா இருக்காரு. இவருடைய இந்த தூக்கமின்மைய பரிசோதிக்க அமெரிக்கா மற்றும் தாய்லாந்துல சிகிச்சைக்கு அழைச்சிருக்காங்க. ஆனா தாய் என்காக் சிகிச்சை எடுத்துக்க ஒத்துக்கல. கிட்டத்தட்ட 60 வருஷங்களா அவருடைய ஊர்ல இருந்து வெளிய போகவே இல்லையாம் தாய்‌ என்காக்‌. அது மட்டுமில்லாம அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், ஊர் மக்கள்ன்னு யாருமே இவர் தூங்கி பாத்ததில்லனு வியப்பா சொல்றாங்க.

சாதாரணமான மத்த மக்கள்ல மாதிரி இவருக்கும் தூங்கணும்னு ஆசை வந்து, தூக்க மாத்திரை, நாட்டு மருத்துவத்துல தூக்கம் வர்ரதுக்கான சிகிச்சைகள்னு எல்லாத்தையும் முயற்சி பண்ணி பாத்திருக்காரு. ஆனா எதுவுமே ஒர்க்கவுட் ஆகல. விவசாயம், தோட்டம்னு தான் இவருடைய நேரத்தை செலவிடுவாராம் ‌.

இவருடைய இந்த தூக்கமின்மைக்கு 1955 - 1975 வரைக்கும் அவர் இருந்த பகுதிகள்ல சில போர் நடந்திருக்கு. அதனால ஏற்பட்ட PTSD அதாவது 'போஸ்ட் ட்ராமடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஸாடர்' ஆ இருக்கலாம்னு மருத்துவர்கள் சந்தேகிக்குறாங்க.

என்னதான் PTSDஆ இருக்கும்னு சந்தேகிச்சாலும், இவருடைய இந்த நிலைமைக்கு சரியான காரணம் என்னன்னு மருத்துவர்களால கண்டுபிடிக்க முடியல. ஆக மொத்தத்துல, இந்த உலகத்திலேயே தாய் என்காக்-கு தான் அதிகமான நேரம் வாய்க்கப்பட்டிருக்கு‌..