Karnataka : இலவச பேருந்து பயணத்திற்கு ஆசைப்பட்டு புர்காவில் வந்த இளைஞர்!

அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்ததால் சில பெண்கள் அவர் அருகே சென்று, பர்தாவை நீக்கி முகத்தை காண்பிக்கும் படி கூறியும் அவர் மறுத்துவிட்டார்.
Karnataka
Karnataka Karnataka
Published on

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. கட்சி அளித்த வாக்குறுதிப் படி, அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை கடந்த ஜூன் 11ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தியது.

இதனால் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், தர்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா சம்சி பேருந்து நிலையத்தில், பர்தா அணிந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்ததால் சில பெண்கள் அவர் அருகே சென்று, பர்தாவை நீக்கி முகத்தை காண்பிக்கும் படி கூறியும் அவர் மறுத்துவிட்டார்.

இருப்பினும் சில பெண்கள் வலுக்கட்டாயமாக அவரது பர்தாவை விலக்கியபோது, அவர் பெண்ணல்ல, ஆண் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இலவசமாக பஸ்சில் பயணிப்பதற்காக, பர்தா அணிந்ததாக அந்த நபர் கூறினார். இதையடுத்து பொது மக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Karnataka
Nepotism : BJP-யில் வாரிசு அரசியல் இல்லையா? | Amit Shah - Jaishah

விசாரணையில், அவர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கோடகேரியைச் சேர்ந்த வீரபத்ரையா நிங்கய்யா 40 என்பது தெரிய வந்தது. பர்தா அணிந்து இலவசமாக பஸ்சில் பயணித்து, பெங்களூரு வழியாக தார்வாருக்கு வந்துள்ளார்.

விசாரணையில் அவரிடம் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆதார் கார்டு நகல் இருந்துள்ளது. இதையடுத்து, போலீஸ் விசாரணையில் இறங்கியது. அவர் இலவச பயணத்துக்காக பர்தா அணிந்து வந்தாரா? அல்லது பஸ்சில் பெண்களிடம் நகை பறிக்கும் நோக்கத்தில் மாறுவேடத்தில் வந்தாரா? என்பது தெரியவில்லை.

Karnataka
Karnataka Budget 2023 : காதில் பூவுடன் வந்த காங்கிரஸ் MLA கள் ! | BJP

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com