நைட் ஒரு மணி நேரம் கம்மியா தூங்கினாலே நமக்கு அடுத்த நாள் கிறுகிறுன்னு வரும். ஆனால், ஒருத்தர் 60 வருசமா பொட்டு தூக்கம் இல்லாம வாழ்ந்துட்டு இருக்கார்னா நம்ப முடியுதா? ஆமா, அப்படி ஒருத்தர் வாழ்ந்துட்டு இருக்கார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த தாய் நகோக் அப்படிங்கிற 80 வயசு தாத்தாதான் அந்த அதிசய மனிதர். 1973ல இவருக்கு திடீர்னு காய்ச்சல் வந்திருக்கு. அந்த காய்ச்சல் வந்ததுல இருந்து இவருக்கு இப்படி தூக்கம் இல்லாம போயிடுச்சாம். தூங்குறதுக்கு என்னன்னவோ முயற்சி பண்ணி பார்த்தும் எதுவுமே வேலைக்கு ஆகலையாம்.
சிலர் "சரக்கடிச்சுட்டு படுப்பா தூக்கம் தன்னால வரும்"னு சொல்ல அதையும் ட்ரை பண்ணி பார்த்திருக்கார். சரக்குதான் காலியாகிருக்கு. இவருக்கு தூக்கம் வரல இப்படியே 60 வருஷம் ஓடிப்போயிருச்சு. இவரை டாக்டர்கிட்ட செக் பண்ணி பார்த்ததுல சிறுநீரகத்தில சின்னதா பிரச்சனை இருக்கு மத்தபடி இவர் நல்லாதான் இருக்கார்னு டாக்டர் சொல்லிருக்கார்.
இந்த 60 வருசமா தூங்கவே இல்லேன்னாலும் சத்தான சாப்பாடு க்ரீன் டீனு குடிச்சு நல்ல ஆரோக்யமா தெம்பாதான் இருக்காராம். இவருக்கு ஒரே ஒரு ஆசைதானாம் வாழ்நாள்ல ஒருவாட்டியாவது நிம்மதியா தூங்கணும்ங்கிறதுதான் அந்த ஆசையாம்.