Abdul Bangura Abdul Bangura
Lifestyle

Abdul Bangura : உலகிலேயே அதிகம் படித்தவர் இவர்தான் - அப்படி என்னென்ன படித்தார்?

ஐந்து துறைகளில் பி.எச்.டி பட்டமும் English, Temne, Mende, Krio போன்ற 18 உலக மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும் இருக்கிறார் கரீம் பங்குரா.

Zulfihar Ali

உலகிலேயே அதிகம் படித்த நபர் யார் தெரியுமா? அது இவர்தான்! இவருடைய பெயர் அப்துல் கரீம் பங்குரா.தற்போது 70 வயதான இவர் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியேரா லியோனிக் குடியரசைச் சேர்ந்தவர். உலகில் உள்ள 18 மொழிகளை  ரொம்ப சாதாரணமாக பேசக்கூடியவராம், அதுபோக 5 பிஎச்டி பட்டங்களையும் இவர் வாங்கியிருக்கிறார்.

பள்ளிப்படிப்பை ஆப்பிரிக்காவில் முடித்த  பங்குரா சில காலங்களுக்கு பிறகு அமெரிக்காவில் குடியேறுகிறார். அனைத்து சப்ஜெக்ஸ்ட்களையும் கரைத்து குடிக்கும் திறமையுள்ள இவர் டீச்சர், சயின்டிஸ்ட் என எல்லா விதமான வேலைகளும் பார்த்திருக்கிறார்.

இதுவரை 250 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 35 புத்தங்கங்களும் எழுதியிருக்கிறார். பொலிட்டிகல் சயின்ஸ், கம்பியூட்டர் சயின்ஸ், எக்கனாமிக்ஸ் இப்படி  ஐந்து துறைகளில் பி.எச்.டி பட்டமும் வாங்கியிருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக English, Temne, Mende, Krio, Fula, Kono, Limba, Sherbro, Kiswahili, Spanish, Italian, French, Arabic, Hebrew, German என 18 உலக மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராகவும்  இருக்கிறார் கரீம் பங்குரா.


இவருடைய சாதனைகளுக்காக உலகப்புகழ் அறிஞர் விருது, மத்திய அட்லாண்டிக் எழுத்தாளர்கள் சங்க விருது, டாப்ஸ் ஆஃப்ரிக்கன்-சென்டர்டு விருது, துபாய் இன்டர்நேஷனல் விருது என வீடு முழுக்க விருதுகளாக வாங்கி குவித்து வைத்திருக்கிறார் பங்குரா. ஒரு பிபிஏ பட்டம் வாங்கவே நான் படாதபாடு பட்டேன். எப்படித்தான் இம்புட்டையும் இவர் படிச்சு முடிச்சாரோ தெரியல.