பேனா பேனா
Lifestyle

ஒரு பேனாவின் 66 கோடி : உலகின் மிக விலை உயர்ந்த இந்த பேனா பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த கோல்டன் நிப் பயன்படுத்துவதனால் பேனா நீண்ட காலம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உழைக்கும். உங்களிடம் தற்போது ரூபாய் 66 கோடி இருந்தால் நீங்கள் இந்த பேனாவை வாங்குவீர்களா?

டைம்பாஸ் அட்மின்

அமெர்உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடியது ஒன்று பேனா . அவற்றின் சாதாரணமாக ஒரு பேனாவின் விலை ரூபாய் 5 ல் இருந்து 10 வரை இருக்கும். விலை உயர்ந்த பேனா வாங்க விரும்பினால் 100 இல் இருந்து ஆயிரம் வரை பேனாக்களும் உண்டு.

ஃபுல்கோர் நாக்டர்னஸ் என்னும் பேனாவின் விலை 66 கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த ஃபுல்கோர் நாக்டர்னஸ் பேனா தங்கத்தினால் உருவாக்கப்பட்டிருக்கும் அவ்வளவு தானே என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது.

இத்தாலியில் புகழ்பெற்ற பேனா நிறுவனமான திபால்டி அக்டோபர் 1916 இல் கியூசெப் திபால்டி என்பவரால் நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை திபால்டி இந்நிறுவனம் ஆனது 90 ஆண்டுகளுக்கும் மேலாக பேனாக்களை உருவாக்கி வருகிறது.

இந்த நிறுவனம்தான் ஃபுல்கோர் நாக்டர்னஸ் என்னும் அற்புதமான பேனாவை உருவாக்கியது. இந்த அழகான, அற்புதமான விலை உயர்ந்த பேனாவை 2010 இல் ஷாங்காயில் நடந்த அறக்கட்டளை ஏலத்தில் $8 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. அதாவது, தற்போதைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 66 கோடி ஆகும்.

அந்தப் பேனா வில் உள்ள சிறப்பு என்னவென்றால், இது ஃபையின் தெய்வீக விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது பேனாவின் தொப்பி மற்றும் பேனாவின் உடல் பகுதி ஆகியவற்றின் விகிதம், மூடப்படும்போது ஃபை விகிதத்திற்கு (Φ = 1.618033988749895…) சமமாக இருக்கும் படியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்திற்காக மட்டும் இந்த பேனா இவ்வளவு விலையாக வாய்ப்பு கிடையாது. முக்கிய காரணம் 945 கருப்பு வைரங்களுடன் 123 மாணிக்கங்களுடன் அப்பேனாவில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபுல்கோர் நாக்டர்னஸ் பேனாவில் தொப்பியில் உள்ள சிறிய பொத்தானுக்கு மேலே 16 கிளிப்புகள் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் ஒரு கோல்டன் நிப் உள்ளது.

இந்த கோல்டன் நிப் பயன்படுத்துவதனால் பேனா நீண்ட காலம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உழைக்கும் என்பதற்காகத்தான். இந்த வகையிலான பேனா உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் இருப்பதால் கூட இவ்வளவு விலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்களிடம் தற்போது ரூபாய் 66 கோடி இருந்தால் நீங்கள் இந்த பேனாவை வாங்குவீர்களா?

- அ.சரண்.