2003 உலகக்கோப்பைல பௌலர்கள் சச்சின்ற சூறாவளியோட ராட்சத தாக்கத்துல சிக்கி சின்னாபின்னமானாங்க. அதற்கு அவர் மேற்கொண்ட சிறப்பு பயிற்சி என்ன தெரியுமா?
பௌலர்கள் - பேட்ஸ்மேன்களுக்குள்ள கொடுக்கல் வாங்கல் சகஜம்னாலும் 2003 உலகக்கோப்பைல சச்சின்ட ரெண்டு பௌலர்கள் வாங்கிக் கட்டிக்கிட்டாங்க. அதுல ஒருத்தர் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டாரு. அது இங்கிலாந்தோட ஃபாஸ்ட் பௌலர் ஆன்ட்ரூ கேடிக்தான்.
இந்தப் போட்டி தொடங்குறதுக்கு முன்னால், "சச்சினும் இந்திய அணில ஒரு சாதாரண பேட்ஸ்மேன்தான்" அப்படின்னு ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தாரு கேடிக். சாதாரணமா தெரியற தனக்குள்ள எப்படி அசாத்தியமான ஒருத்தன் ஒளிஞ்சுருக்கானு சச்சின் போட்டியப்ப அவருக்குக் காட்டுனாரு.
அச்சுறுத்துவதா நினைச்சு ஷார்ட் பால் போட்டாரு கேடிக். `யாருகிட்ட?' அப்படின்னு அத புல் ஷாட்டாக மாத்துனாரு சச்சின். இதுல என்ன பெரிய விஷயம்னு தோணுதா? அங்கதான் விஷயமே இருக்கு. பந்து பவுண்டரி லைனை இல்ல மிகப்பெரிய டர்பன் மைதானத்தையே கடந்து கார் பார்க்கிங்ல தஞ்சம் புகுந்துச்சு. பொதுவா ஆட ரிஸ்க் ஆன புல் ஷாட்ல பந்த பவுண்டரிய கிராஸ் பண்ண வைக்குறதே கஷ்டம், டைமிங் மிஸ் ஆனா, போதுமான பவர் கொடுக்கலேன்னா மிட் விக்கெட்ல, டீப் ஸ்கொயர் லெக்ல கேட்ச் கொடுத்து வெளியேற வேண்டியதுதான்.
கோலிகூட தன்னோட கரியரோட தொடக்கத்துல புல் ஷாட்ல எக்ஸ்பர்ட் ஆக கடினப் பயிற்சி பண்ணாரு. அப்படிப்பட்ட புல் ஷாட்ல பந்த வெளியே அனுப்பி, தான் எவ்ளோ ஸ்பெஷல் அன்னைக்கு நிரூபிச்சாரு. அதே தொடர்ல அக்தர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசுன ஷார்ட் பால்ல சச்சின் ஆடுன அப்பர்கட் இன்னைக்கு வரை நினைவுல இருக்கு, என்னைக்கும் இருக்கும். இது மட்டுமல்ல!
இந்தத் தொடர் முழுவதும் ரன் வேட்டையாடி 673 ரன்களை 61.18 ஆவரேஜோட அடிச்சு சச்சின் சாதிச்சுருந்தாரு. இவ்வளவுக்கும் இந்தத் தொடர் நடக்கறப்போவோ அதுக்கு முன்பாகவோ சச்சின் ஒரு நாள் கூட நெட் ப்ராக்டீஸ் பண்ணல. அப்படியிருக்க இவ்வளவு சிறப்பாக எப்படி ஆட முடிஞ்சது? அதற்கு சச்சின் வித்தியாசமான ஒரு பயிற்சி பண்ணாரு.
சச்சின் 16 - 18 யார்டுகள் தொலைவுல பயிற்சியாளர் குழுல இருந்த ஒருத்தர நிறுத்தி பந்துகள தன்ன நோக்கி எறிய வைப்பார் சச்சின். இன்றைய தேதியில ரோபோ ஆர்ம் பண்ற அதே வேலைய அப்போ ஆட்கள வச்சு சச்சின் பண்ண வச்சாரு. சரி எதுக்கு 18 யார்டுகள், 22 யார்டுகள்தானே ஸ்டம்புகளுக்கு இடையிலான தொலைவுனு யோசனை போகுதுதானே?
2003 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில நடந்துச்சு. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான தென்னாப்பிரிக்க பிட்ச்கள்ல அவங்கள சமாளிக்கத்தான் இந்தப் பயிற்சி. 16 யார்டுகள்ல இந்தப் பயிற்சிய பண்ணதால அது மேட்ச் அப்போ 22 யார்டுகளா ஆகுறப்போ பந்து சச்சினை நோக்கிவர மைக்ரோ விநாடி தாமதிக்கும். அதுபோதும் சச்சினுக்கு பந்தோட லைன் அண்ட் லெந்தை பற்றி கணிக்கறதுக்கு.
அந்த குறுகின நேரத்துக்குள்ள அடிக்க வேண்டிய ஷாட் எதுனு அவரோட மைண்ட் யோசிச்சுடும். இந்தக் காரணத்தால்தான் அந்தத் தொடர்ல சச்சினால ஃபாஸ்ட் பௌலர்கள அவ்வளவு சுலபமாக எதிர்கொள்ள முடிஞ்சது. 673 ரன்களைக் குவிக்கவும் முடிஞ்சது.
பௌலர் பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான விக்ரம் வேதா போட்டில சச்சின் மத்த பேட்ஸ்மேன்கள விட முந்தியிருந்ததற்கு இதுதான் காரணம். அதுதான் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு அந்த என்ஜின நிக்காம ஓடவச்சது.