Japan Japan
Lifestyle

Japan : உலகத்திலேயே விலைமதிப்பான Ice Cream - விலை ரூ.5.54 லட்சமா?

செலாட்டோ எனும் ஜப்பானிய நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஐஸ்கிரீமுக்கு 'Byakuya' என்று பெயரிடப்பட்டு, கின்னஸ் உலக ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது.

ஜெபிஷா ஜெ ஷோ

பொதுவாக ஐஸ் கிரீமுக்கு வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் அதிகம். அதுவும் கோடைகாலமென்றால் ஐஸ் கிரீம் பலருக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.  சாக்லெட், ஸ்ட்ராபெரி, பட்டர் ஸ்காச் என ப்ளேவர்களும் அதிகம். 5 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை மதிப்பான எக்கச்சக்கமான ஐஸ்கிரீம்களை சுவைத்திருப்போம், கேள்விப்பட்டுமிருப்போம்.

ஆனால் இப்போது "என்னது, ஒரு ஐஸ்கிரீமோட விலை  இவ்வளவா?" என்று வாயை பிளக்கும் அளவுக்கு செலாட்டோ எனும் ஜப்பானிய ப்ரான்ட் ஒன்று இதை தயாரித்துள்ளது. 'Byakuya' எனும் பெயரிடப்பட்ட இந்த ஐஸ்கிரீம் தற்போது கின்னஸ் உலக ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது. 

அதோடு இந்த ஐஸ்கிரீமின் விலைக்கான காரணத்தையும் கின்னஸ் பகிர்ந்துள்ளது. அதன்படி, தங்க இலைகள், ஆல்பா மற்றும் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் white truffle ( 1 கிலோவின் மதிப்பு ரூ. 12 லட்சம்), இயற்கையாக கிடைக்கும் பார்மிகியானோ ரெஜியானோ சீஸ் மற்றும் சேக் லீஸ் ஆகியவற்றால் தான் இந்த ஐஸ்கிரீம் செய்யப்படுகிறது. இந்த ஐஸ்கிரீமின் ஜப்பானிய மதிப்பு 873,400 யென்கள், அதாவது நம் இந்திய நாட்டு மதிப்பில் சுமார் ரூ.5.54 லட்சம்.

மேலும் ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய கலவைகளை பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் செய்யப்பட்டதாக செலாட்டோ நிறுவனம் கூறியுள்ளது. அதோடு இந்த ஐஸ்கிரீம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கான வெற்றியும் கூட!