Wrestling விளையாட்டை ஸ்கிரிப்ட் என்று சொல்லி வந்தாலும் மக்களுக்கு இந்த விளையாட்டின் மீதான மோகம் மட்டும் குறையவே இல்லை. இந்த விளையாட்டானது ரிங்கிற்கு உள்ளே சண்டை போடுவதற்காக மட்டுமில்லை. ஒவ்வொரு வீரர் என்ட்ரி சாங் முதல் நடுநடுவே அவர்களுக்கிடையேயான வார்த்தைப் போர்கள், நடுவர்களுடனான தள்ளுமுள்ளு, பார்வையாளர்களை மிரட்டுவது என பலவிதங்களில் இருக்கிறது. அதிலும் சிலருடைய என்ட்ரிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். 'ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ களத்துக்கு வர்றப்பவே அலப்பறையைக் கூட்டணும்' என செயல்படும் வீரர்கள் தான் இதுபோன்ற ஆட்டங்களில் ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறார்கள்.
WWE அல்லது Wrestling விளையாட்டு அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகமெங்கும் இந்த மல்யுத்தத்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளதால் அவ்வப்போது சில நாடுகளில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறுவதும் உண்டு. அந்த வரிசையில் இந்த WWE போட்டியானது இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ஒருவருக்கொருவர் சண்டை போடவேண்டிய நேரத்தில் தோளோடு தோள் சேர்த்து RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆடி Vibe செய்தனர்.
ட்ரீவ் மிக்லயன்டையர், ஜீன்டெர் மஹால், சமி சயன், மற்றும் கெவின் ஓவென்ஸ் இந்த நான்கு பெரும் ரிங் உள்ளே இருந்தபோது எல்லோரும் ஆர்வத்தோடு ரத்தம் தெறிக்கத் தெறிக்க சண்டை போடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். அப்போது ஓரமாக அமர்ந்திருந்த 'டிஜே' நண்பர் ஒருவர், 'நாட்டு நாட்டு' பாடலை ஒலிக்க விட, அதற்கு அந்த நான்கு பேரும், சமத்துக்குட்டிகளாக ஆடத் தொடங்கினர்.
'என்னடா... இது ரஸ்லிங்கா... இல்ல ஆடல்பாடல் நிகழ்ச்சியா ?' என்ற சந்தேகம் வந்தது. எப்போதும் விறைப்பாக நீண்ட முடியும், தாடியும், ஜிம் பாடியுமாக இருக்கும் இவர்களின் இந்த 'நாட்டு நாட்டு' கூட நல்லாத் தான் இருக்கிறது.
இவர்கள் ஆடிய இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இவர்களுடைய இந்த நடனத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் மட்டும், 'சண்டைக்கு எதுக்கு பாஸ் சாங்..?' என்று விமர்சித்து வருகின்றனர்.
No Negativity...Spread Positivity மக்கா!
-பா.முஹம்மது முஃபீத்