WWE இன் நட்சத்திர வீரர் Bray Wyatt மாரடைப்பால் மரணம் - ரசிகர்கள் சோகம்!

2017 இல் WWE இன் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார் Bray Wyatt. கடந்த ஆண்டு கொரோனா மற்றும் இதய பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.
Bray Wyatt
Bray WyattBray Wyatt
Published on

WWEன் நட்சத்திர வீரர் Bray Wyatt aka இம்மண்ணை விட்டு மறைந்தார்..! அவருக்கு வயது 36.

பிரபலமான உலக மல்யுத்த போட்டி WWE இன் நட்சத்திர வீரர், குத்துச்சண்டை துறையில் மிகுந்த பலமான பின்புலம் கொண்ட, குத்துச்சண்டை போட்டியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் Bray Wyatt aka ஆகஸ்ட் 24 ஆம் தேதி வியாழக்கிழமை காலமானார் என்று WWE தனது சமூகவலைதள பக்கத்தில் செய்தியை வெளியிட்டுள்ளது.

குத்துச்சண்டை துறையில் தவிர்க்க முடியாத வீரரான Bray Wyatt akaனுடைய இயற்பெயர் பெயர் Windham Rotunda என்பதாகும்.

Mike மற்றும் stephanie Rotunda ஆகியோரின் மகன் இவர். இவரின் தந்தை WWEல் தனது பங்களிப்பை செய்து தவிர்க முடியா வீரராக உள்ளார். இவரின் தாத்தா Robert deroy Windham மல்யுத்தத் துறையில் மிகப்பெரிய சாதனைகளை செய்தவர். Blackjack mulligan ஆக விளங்குகிறார். இப்படி மல்யுத்த துறையின் குடும்ப பாரம்பரியத்தைக் கொண்ட வீரராக திகழ்ந்தவர் Bray Wyatt.

Bray Wyatt
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

Windham Rotunda கடந்த ஆண்டு கொரோனா மற்றும் இதய பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஆனால் அதிலிருந்து அவர் மீண்டார்.

ஆகஸ்ட் 14 அன்று காலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், அவருக்கும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், அவருடைய ரசிகர்களுக்கு WWE சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் செய்தியை வெளியிட்டுள்ளது.

2017ல் WWEன் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார் Bray Wyatt என்பது கூடுதல் தகவல். அவரின் இறப்பிற்கு WWEல் குத்துச்சண்டை வீரர்களும் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர். இவரின் இறப்பு அவரது ரசிகர்களையும், குத்துச்சண்டை வீரர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- மோ.நாக அர்ஜுன்.

Bray Wyatt
Kadaisi Vivasayi : தேசிய விருது பெற்ற நல்லாண்டியின் சொந்த ஊரின் வரையப்பட்ட அவரின் உருவப்படம்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com