தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் 'ஒரு காதலன் ஒரு காதலி' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல்வேந்திரன் இன்று, ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
கடந்த 1982-ஆம் ஆண்டு கோவையில் இருந்து சினிமா கனவில் சென்னை வந்தவர்தான் இந்த செல்வேந்திரன். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர முயற்சித்திருக்கிறார். அவரிடம் வாய்ப்பில்லாமல் போக இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகியிருக்கிறார். இந்தியன், காதலன், ஜீன்ஸ் இப்படி ஷங்கரின் சூப்பர்ஹிட் படங்களில் உதவி இயக்குனராக சினிமா கற்றுக்கொண்ட செல்வந்திரன். 2009-ஆம் ஆண்டு ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கினார்.
படம் பெரிதாக போகாத காரணத்தாலும் அதை தொடர்ந்து வாய்ப்புகள் வராத காரணத்தாலும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தற்சமயம் உணவு, உடை, இருப்பிடம் எதுவும் இல்லாமல் தெருவில் வசித்து வருவதாகவும் சாப்பாட்டுக்காக அவர் பிச்சை எடுப்பதாகவும் கூறப்படுகிறது.
-ஜுல்பிஹார் அலி