நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் பள்ளி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?
ஷங்கர் இன்டர்நேஷனல் ஸ்கூல்:
இது பிரமாண்டமான ஸ்கூல்னு அண்ட சராசரமே அறிந்ததுதான். ரோபோட்ஸ் எல்லாம் ஆயா வேலை பார்க்கும். இங்கே சூப்பர் கம்ப்யூட்டர்ஸ்தான் டீச்சர்ஸ். ஆனாலும் பசங்க ஃபெயில் ஆகிட்டா கம்ப்யூட்டருக்கே கண்ணு வேர்க்கும்.
திங்கள் ப்ரேயர் சாங்குக்கு பிரேசில் செட் போட்டு நடக்கும். செவ்வாய்க்கிழமை டிஸ்னி லேண்டு, இப்படியே ஒவ்வொரு நாளும் நடக்கிறதனால பிள்ளைங்க அழாம ஸ்கூலுக்குக் கௌம்பும். இங்கே எஜுகேஷன் டூர் எல்லாம் செவ்வாய்க் கிரகம், நிலா, ஸ்பேஸ் ஸ்டேஷன் இந்த மாதிரி இடங்களுக்குத்தான்.
நீதி போதனைனு ஒரு வகுப்பே இப்போ கிடையாதுனு கல்வியாளர்கள் எல்லாம் புலம்புறாங்க. இங்கே அதுக்கு பஞ்சமே இருக்காது.
எல்லா நீதி போதனைகளையும் செஞ்சு உங்களை சிவாஜியாவோ அன்னியனாவோ கண்டிப்பா மாத்திடுவாங்க.
உங்களைப் பத்தி உலகமே டி.விக்காரங்க மைக்கை பிடுங்கிப் பேசும். பட் இங்கே படிக்க வைக்க, நீங்க உலக வங்கியில்தான் கடன் வாங்கணும்!