MGR timepass
அரசியல்

ADMK : MGRக்கு பதில் Arvind Swamy - அதிமுகவின் வைத்த பேனரால் பரபரப்பு!

அரவிந்த்சாமியின் படம் இருந்துள்ளதை கவனியாமல், எம்.ஜி.ஆர் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பிறகே அது அரவிந்த்சாமி எனத் தெரியவந்ததால், அதன்மீது எம்ஜிஆர் புகைப்படத்தை ஒட்டி மறைத்தனர்.

டைம்பாஸ் அட்மின்

அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்-இன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு வைக்கப்பட்ட பேனரில் நடிகர் அரவிந்த்சாமியின் புகைப்படம் இடம்பெற்றது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள கீழ்மிட்டாளம் ஊராட்சியில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி அவருக்கு அப்பகுதி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். அப்பேனரில் அவரின் படத்துக்குப் பதிலாக நடிகர் அரவிந்த்சாமியின் படம் இருந்துள்ளது. அதை கவனியாமல், அ.தி.மு.க-வினர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பிறகே அது அரவிந்த்சாமியின் படம் எனத் தெரியவந்ததால், அதன்மீது எம்.ஜி.ஆர் புகைப்படத்தை ஒட்டி மறைத்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி ஏ.எல்.விஜய் இயக்கிய 'தலைவி' படத்தில், எம்.ஜி.ஆர்-இன் கதாபாத்திரத்தை அரவிந்த் சாமி ஏற்று நடித்திருந்தார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். அப்படத்தில் வரும் அரவிந்த்சாமியின் ஸ்டில்லையே எம்.ஜி.ஆர் என நினைத்து பேனர் வைத்துள்ளனர்.