modi timepass
அரசியல்

Modi Ji Thali : மோடியை வரவேற்க அமெரிக்க உணவகத்தின் புது ஐடியா !

மோடியின் தாலி நன்றாக விற்பனையானால் ஜெய்சங்கர் தாலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

சு.கலையரசி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செஃப் ஸ்ரீபாத் குல்கர்னி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக தாலி உணவை அவரது பெயரிலேயே வழங்கியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தை முன்னிட்டு நியூஜெர்சியில் உள்ள ஒரு உணவகம் சிறப்பு 'தாலி' உணவை தயாரித்துள்ளது. சமையல்காரர் ஸ்ரீபாத் குல்கர்னி தயாரித்த மோடி ஜி தாலியில் கிச்சடி, ரஸ்குல்லா, சர்சன் கா சாக், காஷ்மீரி டம் ஆலு, இட்லி, தோக்லா, சாச் மற்றும் பப்பட் போன்ற உணவு வகைகள் இடம்பெற்றுள்ளது.

இந்த தாலியில் சர்சன் கா சாக் மற்றும் இட்லி போன்ற பலவகையான உணவுகளும் உள்ளன. இந்த உணவு அங்கு வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப  தயார் செய்யப்பட்டுள்ளது என்றார் குல்கர்னி. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பெயரில் இரண்டாவது தாலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் உணவக உரிமையாளர் திட்டமிட்டுள்ளார்.

"இந்த சிறப்பு தாலியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இது நிச்சயம் பிரபலமடையும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். மோடியின் தாலி நன்றாக விற்பனையானால் ஜெய்சங்கர் தாலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் அவருக்கும் இந்திய அமெரிக்க மக்களுக்கும் நல்ல உறவு உள்ளது" என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு தனது முதல் அரசுமுறைப் பயணமாக, ஜூன் 22-ம் தேதி இரவு விருந்தில் அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடனுடன் ஆகியோருடன் விருந்து சாப்பிடுகிறார்.

பிரதமர் மோடியை மையமாகக் கொண்ட இந்த 'தாலிஸ்' உணவு வகை ஏற்கனவே கடந்த ஆண்டு, செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியைச் சேர்ந்த உணவகம் 56 இன்ச் நரேந்திர மோடி தாலி என்ற பெயரில் தாலியை அறிமுகப்படுத்தியது. கன்னாட் பிளேஸில் உள்ள ARDOR 2.1 என்ற உணவகம், சைவம் மற்றும் அசைவ விருப்பங்களுடன் 56 பொருட்களுடன் இந்த 'தாலி'யை அறிமுகப்படுத்தியது.

'இந்திய ஒற்றுமை நாள்' அணிவகுப்பு ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், ஜூன் 21 ஆம் தேதி, நியூயார்க்கில் உள்ள ஐநா சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியுடன் பல முக்கிய இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வின் போது தான் மோடி ஜீயின்  'தாலி' விருந்து நடைபெற உள்ளது.