DMK DMK
அரசியல்

DMK : 'ED Raid-ஆ ஆள விடுங்கப்பா' - நடையைக் கட்டிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் !

வந்த பாதையை மறந்து பின்னால் திரும்பி நடையை கட்ட தயாரானார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.‌ "அண்ணே வழி இங்கிட்டு இருக்கு திரும்புங்க" என சரியான பாதையில் அழைத்துச் சென்றார் எம்எல்ஏ காதர் பாட்ஷா.

டைம்பாஸ் அட்மின்

ராமநாதபுரத்தில் வருகிற 18-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்ட மீனவர்களுடன் கலந்து ஆலோசனை கூட்டம் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'இ.டி ரைடு' குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...'இ.டி' ரைடா ஆள விடுங்கப்பா என மிரண்டு, வந்த பாதையை மறந்து பின்னால் திரும்பி நடையை கட்ட தயாரானார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.‌ "அண்ணே வழி இங்கிட்டு இருக்கு திரும்புங்க" என சரியான பாதையில் அழைத்துச் சென்றார் எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்.

- கு.விவேக்ராஜ்.