தென்காசி timepass
அரசியல்

தென்காசியில் வெறிநாய் தொந்தரவு - நாய் மாஸ்குடன் குரைத்தபடியே மனு அளித்த நகர மன்ற உறுப்பினர்!

தென்காசியில் நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் வெறிநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரி நாய் முகமுடியுடன் நாய்போல் குரைத்து மனு அளித்த சம்பவம் வைரல் ஆகி வருகிறது.

டைம்பாஸ் அட்மின்

தென்காசியில் நகர்மன்ற கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் வெறிநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த கோரி நாய் முகமுடியுடன் நாய்போல் குரைத்து மனு அளித்த சம்பவம் வைரல் ஆகி வருகிறது. 

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி  கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் சாதிக் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 33 வார்டு பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளான கொடிமரம், மவுண்ட்ரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் வெறிநாய்களின் தொந்தரவு அதிகரித்து காணப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டும் வகையில் 20வது வார்டைச் சேர்ந்து தென்காசி காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர் முகமது ரன்பீர் என்பவர் நாய் முகமூடி அணிந்து வந்துள்ளார்.

"இந்தச் சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தொடர்ந்து பொதுமக்கள் சாலையில் சுதந்திரமாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் செயல்படுவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நாய் முகமூடியுடன் நாய் குரைக்கும் சத்தத்தையும் எழுப்பி நகர் மன்ற தலைவரிடம் மனுவை அளித்துள்ளார்.

- மு.இந்துமதி.