DMK timepass
அரசியல்

DMK: 'ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ZERO' - அல்வா கொடுத்து போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.பாரதி!

தமிழ்நாடு அரசு சார்பில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்வதற்காக மத்திய அரசிடம் 37000 கோடி ரூபாய் கோரப்பட்டது. மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லை என தி.மு.க அரசு விமர்சித்து வருகிறது.

டைம்பாஸ் அட்மின்

மத்திய அரசைக் கண்டித்து நெல்லை வடக்கு ரத வீதி பகுதியில் பொதுமக்களுக்கு‌ அல்வா கொடுத்து நூதனப் போராட்டத்தில் தி.மு.க‌வினர் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தீவிரமாக பெய்த கனமழையினால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தினால் தத்தளித்தன. பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அப்பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசு சார்பில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளை சரிசெய்வதற்காக மத்திய அரசிடம் 37000 கோடி ரூபாய் கோரப்பட்டது. மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லை என தி.மு.க அரசு தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய அரசின் நிதிப் பகிர்வை கண்டித்தும், மக்களுக்கு அதை உணர்த்தும் வகையிலும் திருநெல்வேலியில் தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அல்வா வழங்கப்பட்ட கவரில் "ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ZERO" என எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- மு.இந்துமதி.