Japan Review : கில்லாடி திருடன்; ஆக்‌ஷன் ஹீரோ; அம்மா பாசம் - படம் எப்படி இருக்கு ?

கழிவுநீரை அலசி தங்கத்தை சேகரிக்கும் மக்களின் வாழ்கையையும் அவர்களை காவல்துறை கொடுமைப்படுத்துவதையும் உணர்வுபூர்வமாக சொல்கிறது.
japan
japantimepassonline

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கியிருக்கும் படம் 'ஜப்பான்'.

கதைக்கரு :

கோவையில் ஒரு பிரபல நகை கடையில் ஓட்டைப் போட்டு, மொத்தமாக வழித்தெடுக்கிறான் ஒரு திருடன். அந்தத் திருட்டை செய்தது 'ஜப்பான்' என்கிற பிரபல திருடன்தான் என கண்டுபிடிக்கிறது போலீஸ். அந்த ஜப்பான் யார்? அவன் எப்படிப்பட்ட திருடன்? அவனுக்கும் இந்த திருட்டுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த 'ஜப்பான்'.

ப்ளஸ் :

பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கும் ஒன்லைன் காமெடிகள்.

க்ளைமேக்ஸுக்கு முந்தய சென்டிமென்ட் சீன் காமெடியாகவும் சீரியஸாகவும் க்ளிக் ஆகியிருக்கிறது.

முழுநேர திருட்டு, பகுதிநேர நடிப்பு என ஹீரோ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது சுவாரஸ்யம் தருகிறது.

நகைக்கடை கழிவுநீரை அலசி அதிலிருந்து தங்கத்தை சேகரிக்கும் மக்களும் அவர்களை காவல்துறை கொடுமைப்படுத்துவதையும் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

japan
Tamil Cinema : வித்தியாசமான தமிழ் சினிமா வில்லன்கள் !

மைனஸ்:

சுவாரஸ்யமும் கோர்வையுமற்று ஓடும் திரைக்கதை, 'ஆளவிடுங்கப்பா..' என தியேட்டரை விட்டு ஜப்பானுக்கே ஓட வைக்கிறது.

வரிசை கட்டி வரும் பாடல்களும் கைகொடுக்கவில்லை. பின்னணி இசையும் பெயர் சொல்லவில்லை.

கார்த்தி, சுனில், கே.எஸ்.ரவிகுமார், வாகை சந்திரசேகர் என தெரிந்த முகங்கள் நிறைய இருந்தும் எந்தக் கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.

இத்தனை பலம் பொருந்திய ஹீரோவிற்கு இணையாக வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்படவில்லை.

கார்த்தியின் வாய்ஸ் மாடுலேஷன் சிறிது நேரத்திலேயே போரடிக்க தொடங்கிவிடுகிறது.

முடிவு:

முழுநேர திருடன், பார்ட் டைம் சினிமா ஹீரோ என நல்ல லையனை எடுத்துக்கொண்டு, பிடிப்பில்லாமல் ஓடும் திரைக்கதையாலும் சுவாரஸ்யமற்ற காட்சிகளாலும் ஜெஸ்ட் பாஸ் ஆகியிருக்கிறார் இந்த ஜப்பான்.

japan
'எனக்கு சினிமா சரிப்பட்டு வராது' - ரஜினி சொன்னதன் பின்னணி - பழைய பேப்பர் கடை | Epi 10

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com