Vikram vs Anurag : Kennady படம் குறித்த சர்ச்சையும் சமாதானமும் - நடந்தது இதுதான்!

படத்திற்கும் 'கென்னடி' என பெயர் வைத்திருக்கிறேன். 'கென்னடி' என்பது வேறு யாருமில்லை சியான் விக்ரமின் செல்லப்பெயர்தான். இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை தொடர்பு கொண்டன்.
Vikram
Vikramtimepass
Published on

பிரபல பாலிவு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ராகுல் பட், சன்னி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் விரைவில் உருவாகியுள்ளது 'கென்னடி' திரைப்படம். இப்படம் நடந்துக் கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அனுராக் காஷ்யப், "ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்துத்தான் இந்தப் படத்தை நான் எழுதினேன். அதனால்தான் படத்திற்கும் 'கென்னடி' என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனென்றால் அந்த நடிகரின் செல்லப்பெயர் 'கென்னடி'. 'கென்னடி' என்பது வேறுயாருமில்ல்லை சியான் விக்ரமின் செல்லப்பெயர்தான் அது. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை தொடர்பு கொண்டன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "ஆனால், அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு நடிகர் ராகுலை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அவரது பதில் எனக்கு உற்சாகமாக இருந்தது. ராகுல் அற்பணிப்புடன் சுமார் எட்டு மாதங்கள் இப்படத்திற்காகவே ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்" என்று கூறியுள்ளார்.

இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம், "சமூக ஊடகங்களில் இருக்கும் எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கூறியதன்படி ஒரு வருடத்திற்கு முன் நடந்த நம் உரையாடலை மீண்டும் நினைவு கூர்ந்து பார்த்தேன். அதில், இந்தப் படத்துக்காக நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தீர்கள் என்றும், நான் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்றும் நீங்கள் வருத்தப்பட்டதை வேறொரு நடிகர் மூலம் கேள்விப்பட்டேன்.

பின்னர், நானே உடனடியாக உங்களை அழைத்து, உங்களிடமிருந்து எந்த மெயில் அல்லது மெசேஜும் வரவில்லை என்று விளக்கினேன். நீங்கள் என்னை தொடர்பு கொண்ட ஐடி இப்போது செயலில் இல்லை, 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது எண் மாறிவிட்டது. அன்று உங்களிடம் சொன்னதை இப்போதும் சொல்ல விரும்புகிறேன். அன்று அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் கூறியது போல், உங்கள் கென்னடி படத்தைக் காண நான் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அத்திரைப்படம் என் பெயரில் இருப்பதால் இன்னும் ஆர்வத்துடன் படத்தைக் காணக் காத்திருக்கிறேன்" என்று விளக்கமளித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள அனுராக், "முற்றிலும் சரி பாஸ். மக்களின் தகவலுக்காக, நான் அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் என்று அவர் கண்டறிந்தபோது, அவர் என்னை நேரடியாக அழைத்தார், அவரிடம் வேறு வாட்ஸ்அப் எண் இருப்பதை நாங்கள் தெரிந்துக்கொண்டோம். அவர் என்னை அணுகுவதற்கு சரியான தகவலைக் கொடுத்தார், மேலும் ஸ்கிரிப்டைப் படிப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால் அதற்குள் நாங்கள் அனைவரும் ஒரு மாத ஷூட்டிங்கில் இருந்தோம்.

படத்திற்கு "கென்னடி" என்ற பெயரைப் பயன்படுத்தவும் அவர் அனுமதி அளித்தார். நான் பேட்டியில் கூறியது பின்னால் உள்ள கதை, படம் எப்படி கென்னடி என்று அழைக்கப்பட்டது. சியானோ அல்லது நானோ ஒன்றாக வேலை செய்யாமல் ஓய்வு பெற மாட்டோம் என்று நிச்சயமாக நான் நினைக்கிறேன். நாம் சேது காலத்திற்கு முந்தைய காலத்திற்கு செல்கிறோம்" எnRu குறிப்பிட்டு உள்ளார்.

Vikram
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா - வித்தியாசங்கள பார்ப்போமா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com