AK : அட, அஜித் இதுக்குனு ஒரு உதவியாளர் வெச்சிருக்காரா?

தன்னைப் பற்றி வரும் பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் செய்திகளைத்தான் அதீத ஆர்வமாகக் கேட்டு ரசிப்பாராம் அஜித்.
ajith Kumar
ajith Kumar Timepass
Published on

இதற்காக பிரத்யேகமாக ஒரு உதவியாளரை தனியாக நியமித்திருக்கிறார். அவருடைய வேலையே ஆன்லைனில் ஆரம்பித்து ஆங்கிலப் பத்திரிகை வரை அஜீத்தைப் பற்றி வரும் செய்திகளைச் சேகரித்து அவர் பார்வைக்கு அனுப்புவதுதான்!இந்தத் தகவலை யாரும் கிராஸ்-செக்கோ வடிகட்டியோ தன்னிடம் அனுப்பக்கூடாது என்று ஷாலினி முதல் சுரேஷ் சந்திரா வரை கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறாராம்.

எதுக்கு ஏ.கே..? ஏன் இப்படி? என யாரேனும் கேட்டால்,

"நல்லதைச் சொல்ல ஆயிரம் பேரு இருப்பாங்க. இதுமாதிரி நம்மைப் பத்தி நெகட்டிவா சொல்றதைக் கேட்டாதான் நமக்கான சரியான திசையை நாம தீர்மானிச்சுக்க முடியும்!"என்று டிரேட் மார்க்  சிரிப்பை உதிர்ப்பாராம் அஜீத்.

ajith Kumar
Condolences | கலங்கிய அஜித்... ஆறுதல் சொன்ன விக்ரம்!
Timepass Online
timepassonline.vikatan.com