"எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?" அப்டின்னு பாடி தமிழர்களுடைய மனசுல நீங்கா இடம் பிடிச்சவங்க தான் பாலிவுட் நடிகை கஜோல்.. இவங்க பாலிவுட்ல ஒரு முன்னனி நடிகை... பாலிவுட் நடிகரான அஜய் தேவகானுடைய மனைவி... ஷாருக்கான், சல்மான்கான்னு லீடிங் ஹீரோஸ் கூடவும் கஜோல் நடிச்சிருக்காங்க..
என்னாச்சு ஏதாச்சுனு தெரியல .. திடீர்னு நேத்து சோசியல் மீடியால இருந்து விலகுறதா கஜோல் அறிவிச்சிருக்காங்க..
இன்ஸ்டாகிராம்ல அவங்க போட்டு இருந்த எல்லா போஸ்டையும் delete பண்ணிட்டு, ஒரே ஒரு போஸ்ட் மட்டும் போட்டு இருக்காங்க. அதுல "Facing one of the toughest trails of my life " அதாவது "வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறேன்" அப்படின்ற வரியோட ஒரு போஸ்ட்ட போட்டு இருக்காங்க..
சோசியல் மீடியால இருந்து விலகுறத சொல்லியிருக்க கஜோல் instagram-ல இருக்க எல்லா போஸ்டயும் delete பண்ணியிருக்காங்க.. ஆனா அவங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்ல எந்த பதிவும் நீக்கப்படல.. காஜோல் திடீர்னு சோசியல் மீடியால இருந்து விலகி இருப்பதற்கான காரணம் அவங்க பதிவிட்டு இருக்க போஸ்ட்ல சொன்னது தானா ?? இல்ல அவங்களுடய அடுத்த படமான The good wifeகான பிரமோஷனா ?? அப்படின்னு விமர்சனம் போய்ட்டுதான் இருக்கு !!
கஜோல் திடீர்னு சோசியல் மீடியா இருந்து விலகுனதுக்கான உண்மையான காரணம் இன்னும் வெளிவரல.. பொறுத்துதான் பாக்கணும் போல !!