'காக்கா-நரி நட்புனா என்னனு தெரியுமா?' - A Film by மணிரத்னம்

ஒலக பேமஸான ஒரு வரலாற்று கதைய நம்மூர் டைரக்டர் மணிரத்னம் படமா எடுத்தா எப்படி இருக்கும்னு பாப்போம். மொத, அந்த வரலாற்று கதை என்னனு பாப்போம்.
மணிரத்னம்
மணிரத்னம்டைம்பாஸ்

ஒலக பேமஸான ஒரு வரலாற்று கதைய நம்மூர் டைரக்டர் மணிரத்னம் படமா எடுத்தா எப்படி இருக்கும்னு பாப்போம். மொத, அந்த வரலாற்று கதை என்னனு பாப்போம்.

"ஒரு ஊருல ஒரு காக்கா ஒன்னு, வடை சுடுற பாட்டிக்கிட்ட இருந்து வடையை திருடிக்கிட்டு பறந்து மரத்துல போய் உட்கார்ந்துக்கிச்சாம். அப்ப அங்க வந்த நரி ஒன்னு காக்காய ஏமாத்தி, வடைய கைப்பற்றிக்கிச்சாம்"

இது ரொம்ப வருஷமா இருக்கு கதை தானே. அதான் நான் இத வரலாற்றுக் கதைனு சொன்னேன்.

இயக்குனர் மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம்

மணிரத்னம்:

குட்டி ப்ளாஷ்பேக்.. ஹீரோ காக்கா பொறந்ததுமே அதோட அம்மா அந்த குட்டி காக்காவை பார்த்துச்சு, குட்டி காக்கா கருப்பா இருந்தனால, அம்மா காக்காவுக்கு புடிக்கல (அப்ப அம்மா காக்கா செக்க செவேல்னு இருந்துச்சானு கேக்கக் கூடாது.

ஏன்னா கதைக்கு கால் கெடையாது) அதனால அப்படியே குட்டி ஹீரோ காக்காவ விட்டுட்டு போயிடுச்சு.

அப்புறம் அந்த குட்டி காக்காவ ஒரு குயில்தான் வளர்த்துச்சு. ஒரு பெரிய ரவுடி காக்காவா வளர்ந்தது. அப்ப ஒரு நாள் ஒரு பாட்டி வடை சுடுறத காக்கா பாத்துச்சு. காக்கா பாட்டியோட வடைய திருடுச்சு. அதை பார்த்த நரி இந்த விஷயத்த பாட்டி கிட்ட போட்டு கொடுக்கல. ஃபீல் ஆன காக்கா வடைய கொடுத்து நரியோட ப்ரெண்ட் ஆகிடுது.

மணிரத்னம்
'மணிரத்னம் அகாடமி' - நம் இயக்குநர்கள் சினிமா பள்ளி அரம்பித்தால் இப்படிதான்!
இயக்குனர் மணிரத்னம்
இயக்குனர் மணிரத்னம்

அந்த நரி காக்கா ஏன் ப்ரெண்ட் ஆச்சுனு தெரியுமா? உங்களுக்கு நரினா என்னனு தெரியுமா? நட்புனா என்னனு தெரியுமா? வடைனா என்னனு தெரியுமா? மெதுவடைய திருடுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? மெதுவடையிக்கு நடுல ஏன் ஓட்ட இருக்குனு தெரியுமா? ஏன்னா நரி காக்காவோட நண்பன்.

காட்டுக்காக்கா மனசுக்குள்ள நல்ல நரி நட்புக்குள்ள பாடட்டா..

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com