இந்த வாரத்தை பொழுதுப்போக்காக மாற்ற வந்துவிட்டது தியேட்டர் மற்றும் ஓடிடியில் வரிசையாக வெளியாகும் படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் :
1. வாத்தி
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா நிறுவனம் தயாரிப்பில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் ஆகியோர் நடிப்பில் பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியானது.
2. பகாசுரன்
ஜி. மோகன் இயக்கத்தில் இந்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி தியேட்டரில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் செல்வராகவன் மற்றும் நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இவர்களுடன் ஜே.எஸ்.கே.கோபி, ராதா ரவி, மன்சூர் அலிகான் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
3. வினரோ பாக்யமு விஷ்ணு கதா (Vinaro Bhagyamu Vishnu Katha)
வினரோ பாக்யமு விஷ்ணு கதா முரளி கிஷோர் அப்புரு இயக்கத்தில் ஜிஏ2 பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த வாரம் பிப்ரவரி 17 தெலுங்கில் வெளியாகும் ஒரு காதல் ஆக்ஷன் தெலுங்கு திரைப்படம். இப்படத்தில் கிரண் அப்பாவரம் மற்றும் காஷ்மீர் பர்தேசி ஆகியோர் நடித்துள்ளனர்.
4. கிறிஸ்டி (Christy)
ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் இந்த வாரம் பிப்ரவரி 17 ஆம் தேதி மலையாளத்தில் தியேட்டரில் வெளியாகும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்மினு சிஜோ மற்றும் ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்துள்ளனர்.
5. ஷெஹ்சாதா (Shehzada)
ரோஹித் தவானின் இயக்கத்தில் ஆர்யன், கிருத்தி சனோன் நடிப்பில் இந்த வாரம் பிப்ரவரி 17 தியேட்டரில் வெளியாகும் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம்.
2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே தெலுங்கில் நடித்த 'அலா வைகுந்தபுரமுலூ' படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
ஓடிடியில் வெளியாகும் திரைப்படம்:
1. A Sunday affair
இந்த வாரம் பிப்ரவரி 14-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸில் ஆங்கிலத்தில் வெளியாகும் திரைப்படம்.
2. Ten little mistresses
இந்த வாரம் பிப்ரவரி 15 பிரைமில் ஆங்கிலத்தில் வெளியாகும் திரைப்படம்.
3. Lost
இந்த வாரம் பிப்ரவரி 16ம் தேதி ZEE5யில் வெளியாகும் இந்தி திரைப்படம்.
ஓடிடியில் வெளியாகும் சீரிஸ்கள்:
1. ரெட் ரோஸ் (Red rose)
இந்த வாரம் பிப்ரவரி 15ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸில் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
2. African Queens: Njinga
இந்த வாரம் பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகிறது.
3. The upshaws சீசன் 3
இந்த வாரம் பிப்ரவரி 16ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸில் ஆங்கிலத்தில் வெளியாகிறது.
4. The night manager
இந்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி hotstar-யில் இந்தியில் வெளியாகிறது.
5. A girl and an astronaut
இந்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகிறது.
தியேட்டரில் வெளியாகி இந்த வாரம் ஓடிடியில் வரும் படங்கள்:
1. மாளிகைப்புரம் (Malikappuram)
இந்த வாரம் பிப்ரவரி 15ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் மலையாளத்தில் வெளியாகும் திரைப்படம்.
2. சதா நன்னு நதிபே(Sadha Nannu Nadipe)
இந்த வாரம் பிப்ரவரி 14ஆம் தேதி தெலுங்கில் hotstar-ல் வெளியாகும் திரைப்படம்.
3. சர்க்கஸ்(Cirkus)
இந்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியில் நெட்ஃப்லிக்ஸில் வெளியாகும் திரைப்படம்.
4. லக்கி லக்ஷ்மன் (Lucky lakshman)
இந்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி தெலுங்கில் (Aha) ஆஹாவில் வெளியாகும் திரைப்படம்.
5. வீகம் (Veekam )
இந்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி மலையாளத்தில் (zee5)ஜி5யில் வெளியாகும் திரைப்படம்.