'ஹே.. ஹே.. கோயம்பத்தூர் சிங்கக்குட்டி ஹிப் ஹாப் ஆதி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 8

மூன்றாம் வகுப்பு வரையிலான தன் வாழ்க்கை வரலாற்றை, 'சாக்பீஸ நொறுக்கு', 'பல்பமே துணை' என்ற தலைப்புகளில் நாடகமாக இயக்கி நடித்திருப்பார்.
ஹிப் ஹாப் ஆதி
ஹிப் ஹாப் ஆதிடைம்பாஸ்

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.

இந்த வாரம், கோயம்பத்தூர் சிங்கக்குட்டி என தன்னைத்தானே செல்லமாக அழைத்துக்கொள்ளும் ஹிப் ஹாப் ஆதியின் பள்ளிக்காலத்தைதான் பார்க்கப் போகிறோம்.

1. பள்ளி அசெம்பிளியில் தேசிய கீதம் பாடும்போது, இவர் மட்டும் 'ஹே ஹே ஜனகனமன.. ஹே ஹே ஜனகனமன..' என பாடியிருப்பார்.

2. அசெம்பிளியில் மற்ற மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடுகையில், திடீரென்று உள்ளே புகுந்து, 'ஹே திஸ் இஸ் ஹிப் ஹாப் தமிழா.. கோயம்பத்தூர் சிங்கக்குட்டி ஆன் ட்ராக்.. ஹே ஹே நீராருங் கடலுடுத்த...' என 'Tell me about yourself'-ஐ பாடலைப் போல பாட ஆரம்பித்து, ஹெட் மாஸ்டரிடம் அடி வாங்கியிருப்பார்.

ஹிப் ஹாப் ஆதி
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'
3. ஆண்டு விழாவில் மற்ற மாணவர்கள், 'விக்ரமாதித்யனும் வேதாளமும்', 'பரமார்த்த குருவும் ஐந்து சீடர்களும்', 'மகான் காந்தி மகான்' என நாடகம் போடும்போது, ஆதி மட்டும், மூன்றாம் வகுப்பு வரையிலான தன் வாழ்க்கை வரலாற்றையே, 'சாக்பீஸ நொறுக்கு', 'பல்பமே துணை' என்ற தலைப்புகளில் நாடகமாக இயக்கி நடித்திருப்பார்.

4. 'ஐங்குறு காப்பியங்கள் என்னென்ன?', 'மழைநீர் சேமிப்பு தொட்டியின் பயன்களைப் பட்டியலிடுக', 'write about Your Village' என எந்த பாடத்தில் இருந்து கேள்விக்கேட்டாலும், 'நட்புனா என்னனு தெரியுமா? நட்பே துணை, சிங்கிள் பசங்க, லோக்கல் பசங்க, மிடில் க்ளாஸ் லைஃப்னா என்னனு நெனச்ச?, ஜல்லிக்கட்டு வீரம், தமிழன்தான் கெத்தே' போன்ற வார்த்தைகளையே மாற்றி மாற்றிப் போட்டு பதில் எழுதி, டீச்சர்களைத் திணறடித்திருப்பார்.

5. சத்துணவில் முட்டை தரவில்லை என்றாலும், ஆல் பாஸ் ஆன தனக்கும் ஸ்பெஷல் க்ளாஸ் வைத்தாலும், பெர்த் டேவிற்கு கலர் ட்ரெஸ் போட நோ சொல்லும் என பள்ளியில் நடக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கு தன் ஹிப் ஹாப்பாலேயே குரல் கொடுத்திருப்பார்.

ஹிப் ஹாப் ஆதி
'வேட்டை மன்னனா? கடத்தல் மன்னனா?' - அது ஒரு டவுசர் காலம் | Epi 6

6. 'க்ளாஸ்ல மெதப்புல தெரியிற டீச்சரு.. என்ன மேடம் நடக்குது ஸ்பெஷல் க்ளாஸ்ல.. டீச்சர் உங்களுக்கு குட் மார்னிங்க.. சாயங்காலம் கிட்டிப் பிள்ள விளையாட எனக்கு நேரமாச்சுங்க' என ஹைப்பீச்சில், கத்தி டீச்சரை டென்ஷனாக்கி ஸ்பெஷல் க்ளாஸில் இருந்து தப்பித்திருப்பார்.  

7. டாய்லட்டில் டீச்சர்களைப் பற்றி தப்புத் தப்பா எழுதிவிட்டு, கீழே 'தமிழான்டா' என எழுதி, இரண்டு மாட்டுக் கொம்பை வரைந்து மாட்டிக்கொண்டு, இரண்டும் காதும் கிழிபட பி.டி., சாரிடம் அறை வாங்கியிருப்பார்.

8. '2கே கிட்ஸ்களின் எம்.ஜி.ஆர் அதரவு அணி' என்று தன் பெயரிலேயே பாலகர்களுக்கான ஒரு அணியை உருவாக்க கோரி, தன் தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.பி.வேலுமணியிடம் மனு கொடுத்திருப்பார்.

ஹிப் ஹாப் ஆதி
'முன்னாள் ச.ம.உ ஹெச்.ராஜா' - அது ஒரு டவுசர் காலம் | Epi 7

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com