அல்லு அர்ஜுன் தெலுங்கு படங்களில் நடிக்கும் பிரபல நடிகர் ஆவார். தென்னிந்திய சினிமாவுடன் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவர். தெலுங்கில் பிரபலமாக உள்ள ஆஹா (Aha) ஓ.டி.டி தளம் தற்போது தமிழிலும் இயங்கி வருகிறது. இந்த ஓடிடி தளம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமானதாகும்.
ஓடிடியைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் AAA சினிமாஸ் என்னும் தியேட்டர் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இந்த தியேட்டரில் 'ஆதிபுருஷ்' படத்தை பிரமாண்டமான பிரீமியரில் ஜூன் 16 ஆம் தேதி திரையிடப்பட்டது.
AAA சினிமாஸ் ஹைதராபாத்தில் திறக்கப்பட உள்ளது. பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் தலைமையிலான இந்த அதிநவீன மல்டிபிளக்ஸ், சினிமா ரசிகர்களுக்கு அதிநவீன திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தரும்.
அல்லு அர்ஜுனின் சிக்னேச்சர் மற்றும் அதிநவீன டிசைன்களுடன் கருப்பு வெள்ளை நிறத்தில் அமைந்துள்ள இந்த AAA சினிமாஸ் ஐந்து திரைகளைக் கொண்டுள்ளது.