Jawan Review : MGR, டபுள் ஆக்‌ஷன், ஜெயிலர், விக்ரம் - தமிழ் சினிமாவையும் கலந்துகட்டிய Atlee ஜவான்!

ஷாருக்கானை வைத்து ஒரு பெரிய ஷங்கர் படத்தை டன் கணக்கான லாஜிக் ஓட்டைகளால் எடுத்திருக்கிறார் அட்லி. எல்லா ட்விஸ்ட்டுகளும் காட்சிகளும் இதுவரை வந்த தமிழ் சினிமாக்களை நினைவூட்டும்படியாகவே உள்ளது.
Jawan
Jawantimepass

இந்தியா முழுவதும் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இன்று வெளியனது.

கதைச்சுறுக்கம்:

நேர்மையான இராணுவ வீரரான தன் அப்பா விக்ரம் ரத்தோர் மீது எதிரிகள் சுமத்திய தேசதுரோகி பட்டத்தை துடைத்தெறியவும், ஊழல் படிந்துருக்கும் இந்தியாவை மீட்கவும், இந்த இரண்டிற்கும் காரணமான வில்லனை அழிக்கவும் களமிறங்குகிறார் ஜெயிலர் அசாத்.

ப்ளெஸ் :

ஷாருக் கானின் நடிப்பு. ஒவ்வொரு ப்ரேமிலும் கவர்கிறார். ஆக்‌ஷன், நய்யாண்டி என இளம் ஷாருக்கான் கலக்க, மாஸ் கேட்டகிரியில் சிக்ஸர் அடிக்கிறார் அப்பா ஷாருக் கான்.

அனிருத்தின் தீம் ம்யூஸிக். ஜெயிலர், விக்ரம் வகையறா போல படம் முடிந்தும் நமக்கு ஒரு வைப்பைத் தரவில்லை என்றாலும், படம் பார்க்கும்போதும் மிரட்டுகிறார்.

ஆக்‌ஷன் சீக்வன்ஸ். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணியிசை என ஆக்‌ஷன் காட்சிகளில் பக்காவாக க்ளிக் ஆகியிருக்கிறது.

வில்லன் விஜய் சேதுபதி. தொடக்கத்தில் டெம்ப்ளட் வில்லனாக டல் அடித்தாலும், இரண்டாம் பாதியில் தன் சின்ன சின்ன மேனரிஸத்தால் சிரிப்பையும் பயத்தையும் ஒரு சேர தருகிறார்.

எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அவற்றை மறக்க வைக்கிறது அட்லியின் விறுவிறுப்பான திரையாக்கம்.

Jawan
Jawan : இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் Anirudh - எவ்வளவு தெரியுமா?

மைனஸ் :

எமோஷனல் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்து வழிகிறது. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட காட்சி நேரம் சிறிது தான் என்பதால், பெரும்பாலான எமோஷனல் காட்சிகள் ஒட்டவில்லை.

மொத்த படத்திலும் லாஜிக்கை சல்லடைப் போட்டுத் தேடி வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் லாஜிக் ஓட்டை நம் மூச்சை அடைக்கிறது.

இடத்தை அடைக்கும் பாடல்கள் எங்குமே ரசிக்க வைக்கவில்லை.

ஷாருக்கானை வைத்து ஒரு பெரிய ஷங்கர் படத்தை எடுத்திருக்கிறார் அட்லி. எல்லா ட்விஸ்ட்டுகளும் இதுவரை வந்த தமிழ் சினிமாக்களை நினைவூட்டும்படியாகவே உள்ளது. ஒருவேளை இந்தி சினிமா ரசிகளுக்கு இவை புதிதாகவும் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் பாதியில் வரும் மிக நீண்ட ப்ளாஷ் பேக் நம்மை சோதிக்கிறது. எளிதில் யூகிக்கும்படியாக இருந்தாலும், வலுகட்டாயமாக இழுத்திருக்கிறார்கள்.

மொத்த படமும் 2.50 மணி நேரம் ஓடுகிறது. பெரிய படத்தை பார்த்த அலுப்பே மிஞ்சுகிறது.

முடிவு:

டன் கணக்கான லாஜிக் ஓட்டைகளையும் க்ளிக் ஆகாத சென்டிமென்ட் காட்சிகளையும், ஷாருக் கானின் நடிப்பும், ஆக்‌ஷனும் அனிருத்தின் பின்னணியிசையும் காப்பாற்றியிருக்கிறது.

Jawan
SRK : Jawan படத்தைப் பார்க்க 10 காரணங்கள் ! | Atlee

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com