ஜெயம் ரவி, நயந்தாரா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஐ.அஹமத் இயக்கத்தில் வெளியாகியுள்ளது 'இறைவன்' திரைப்படம்.
கதைச்சுறுக்கம்:
சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பாமல், குற்றவாளிகளுக்கு தானே தண்டனை தரும் முரட்டு காவல்துறை அதிகாரியான ஜெயம் ரவியும், நரேனும் உயிர் நண்பர்கள். இந்நிலையில், சென்னை நகரில் ஒரு சீரியல் கில்லர் ஒருவன் தலைத்தூக்கி பல பெண்களைக் கொடூரமாக சித்திரவதைச் செய்து கொல்கிறான். அவனைப் பிடிக்கும் பொறுப்பு இவர்களிடம் வருகிறது.
கொலைக்காரனை பிடிக்கும்போது நரேன் உயிரிழக்கிறார். அதைத் தொடர்ந்து அந்தக் கொலைக்காரனால் ஜெயம் ரவியின் மொத்த வாழ்க்கையும் ஆட்டம் காண்கிறது. இறுதியில் அந்தக் கொலைக்காரன் என்ன ஆனான்? அவனி இப்படி ஆக என்ன காரணம்? என்பதுதான் மீதி கதை (வதை).
ப்ளஸ்:
மொத்த படத்திலும் நம்மை ஓரளவிற்கு ஆறுதல் படுத்துவது யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை.
ஹரி கே வேதாந்தத்தின் ஒளிப்பதிவும் ஒரு திகில் உலகைக் கட்டமைக்க உதவியிருக்கிறது.
அழகம் பெருமாள், ஆஷிஸ் வித்யார்த்தி, நரேன் போன்ற நன்கு பரிச்சயமான குணச்சித்திர நடிகர்கள் நம்மை ஓரளவிற்கு நம்பிக்கை கொள்ள வைக்கிறார்கள்.
இடைவேளையில் குடித்த கோல்ட் காபி.
மைனஸ் :
படத்தில் எங்குமே லாஜிக் இல்லை. பழைய எம்.ஜி.ஆர் படங்கள் போலதான் போலீஸ் செயல்படுகிறது. எல்லாமே இஷ்டத்திற்கு நடக்கிறது.
ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை யாரையாவது ஒருவரை கொடூரமாக கொலை செய்கிறார்கள். தொடர்ந்து அந்தக் காட்சிகளை நம்மாள் பார்க்கவே முடியவில்லை. அத்தனை கோரம். கை, கால், கண் என எல்லாவற்றையும் அறுத்து விளையாடுகிறார்கள்.
உணர்வுபூர்வமான எல்லா காட்சிகளும் மிகவும் ப்ளாஸ்டிக்காக உள்ளது. அதனால் கொஞ்சம் கூட படத்திற்கு செல்ல முடியவில்லை.
பாடல்கள், காதல் காட்சிகள், அதற்கான காதல் பாடல்கள் என சோதனை மேல் சோதனை.
ஜெயம் ரவியாவது நம்மை காப்பாற்றுவார் என்று நினைத்தால், அவரும் ஒரே மாதிரி 'முரட்டு' முகபாவனையில் வந்து நம்மை தூங்க வைக்கிறார்.
முடிவு:
ஒரு போலீஸ் விசாரணை படமாகவும் இல்லாமல், சீரியல் கில்லர் படமாகவும் இல்லாமல், அக்கிரமான காட்சிகளால் நம்மை பாடாய்படுத்துகிறது இந்த 'இறைவன்'.
வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் சினிமா விமர்சனங்களைப் படிக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.
Please Click : https://bit.ly/3Plrlvr