Kollywood Buzz : Suriya வும் Karthi யும் இணைந்து நடிக்கப் போறாங்க! - Blockbuster Loading...

``அப்பா இனிமேல் நடிக்கும் முடிவில் இல்லை. அவர் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.... விரைவில் எங்களை ஒன்றாகப் பார்க்கலாம்!'' என்று சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் சூர்யா.
Kollywood
Kollywoodtimepass

கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் என்ன தெரியுமா..? அண்ணனும் தம்பியும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்பதுதான்!

இப்போது கோலிவுட்டில் மல்ட்டி ஸ்டாரர் படங்களுக்குத்தான் ஏக டிமாண்ட். அதுக்குக் காரணம் 'மினிமம் கியாரண்டி... ப்ளாக் பஸ்டருக்கு வாரண்டி' இந்த மல்ட்டி ஸ்டாரர் படங்கள் என்பதுதான். தங்களுக்குப் பிடித்த நடிகர்களை ஒன்றாக ஸ்க்ரீனில் பார்ப்பதே பார்வையாளர்களுக்குப் பரவச அனுபவத்தைத் தரும். இதனால் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவார்கள் என்பதால் விக்ரமில் ஆரம்பித்து லியோ வரை இந்த ட்ரெண்ட்டை ஃபாலோ செய்கிறார்கள்.

ஜப்பான், நலன் குமாரசாமி படம், கைதி-2, '96' பிரேம்குமார் படம் என செம லைன்-அப்பில் இருக்கும் நடிகர் கார்த்தியும், பான் இந்தியா 'கங்குவா'வோடு களமாடக் காத்திருக்கும் சூர்யாவும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் 25-வது படமாக வெளிவரவருக்கும் 'ஜப்பான்' படத்தின் டப்பிங் பணிக்கான டீஸர் ஒன்றை இயக்குநர் ராஜுமுருகனோடு சேர்ந்து வெளியிட்டிருந்தார் கார்த்தி. படத்தில் அவரின் கெட்டப்போடு வந்து மாஸ் காட்டியிருந்தார். 

Kollywood
எந்தெந்த பண்டிகைக்கு என்னென்ன படம் டிவில போடுவாங்க? - ஒரு கலகலப்பான லிஸ்ட்! | Tamil Cinema

சமீபத்திய பேட்டி ஒன்றில், ''இந்த மல்ட்டி ஸ்டாரர் ட்ரெண்ட்டை உங்கள் குடும்பத்தை வைத்தே ஃபாலோ செய்யலாமே... அந்தப் படத்தில் நீங்களும் உங்கள் சகோதரர் சூர்யாவும் தந்தை சிவக்குமாருமே சேர்ந்து நடிக்கலாமே?'' என்று கார்த்தியிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு அவர், ``அப்பா இனிமேல் நடிக்கும் முடிவில் இல்லை. அவர் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், நானும் அண்ணனும் நடிப்பதைப் பற்றி இருவரும் பேசியிருக்கிறோம். நினைத்தால் சிலிர்ப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் நானும் அண்ணனும் சேர்ந்து நடிப்பதில் உடன்பாடில்லாமல் இருந்தது. எனக்கு அவருடன் நடிப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

ஆனால் இப்போது ரெடியாக இருக்கிறோம். எங்கள் இருவரையும் ஒன்றாகத் திரையில் பார்க்க எங்களைவிட மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், நல்ல கதையுள்ள ஒரு திரைப்படத்திற்காக மட்டுமே இணைவோம். நல்ல கதைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், வாய்ப்பு வரும்போது நிச்சயமாக இணைந்து நடிப்போம்!” என்றார்.

இதே கேள்வி சமீபத்தில் சூர்யாவிடம் கேட்கப்பட்டபோது, 

``இப்போது இருவருமே ஒரு Comfort Zone-ல் இருக்கிறோம். அதை உடைத்துக் கொண்டு வெளியே வர ஒரு அற்புதமான கதையைத் தேடுகிறோம். இருவரும் இணைந்து நடிப்பது பற்றி பேசினோம். நல்ல கதை வந்தால் மட்டும் இணைந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். விரைவில் எங்களை ஒன்றாகப் பார்க்கலாம்!'' என்று சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் சூர்யா. 

அப்புறம் என்னப்பா... யாராச்சும் செம டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தா கிளம்பிப் போங்கப்பா!  

  - சையத் சஜானா. பா

Kollywood
தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா - வித்தியாசங்கள பார்ப்போமா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com