AK : அஜித்துக்கு நன்றி சொன்ன மஞ்சு வாரியர் - இதுதான் காரணமா?

ஒரு நல்ல ரைடர் ஆகும் முன் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதை நீங்கள் கண்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
AK
AKtimepass
Published on: 

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர், தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘அசுரன்’ படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு வந்தார். அண்மையில், அஜித் குமாரின் ‘துணிவு’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

அந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அஜித் குமாருடன் பைக் பயணங்களில் ஈடுபட்டார். அப்போது, இருவரும் பைக் பயணம் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், புதிதாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை மஞ்சு வாரியர் வாங்கியுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஷோரூம் ஒன்றில் அவர் அந்தப் பைக்கை வாங்கியுள்ளார். அந்தப் பைக்கை ஓட்டும் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஒரு நல்ல ரைடர் ஆகும் முன் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சாலையில் நான் தடுமாறுவதை நீங்கள் கண்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னைப் போன்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நடிகர் அஜித் குமாருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

AK
Thunivu: Ajith Kumar-ஐ ஃபாலோ செய்யும் மலையாள சினிமா ! | Malayalam Cinema
Timepass Online
timepassonline.vikatan.com