Project K : Kamal, Amitabh, Prabhas, Deepika - கூட்டணி போடும் நட்சத்திரங்கள் !

Project K ஒரு science fiction திரைப்படம். இந்த படம் மூலமா கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் அஸ்வனி தட் 50 வருடம் கழிச்சி இணையிறாங்க.
Projeck K
Projeck KProjeck K

நாக் அஸ்வின் இயக்கத்துல 2024ல வெளியாகப் போற படம் தான் Project K. இந்த படத்துடைய முக்கிய கதாபாத்திரத்துல பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கிறாங்க. அது மட்டும் இல்லாம அமிதாப் பச்சன் மற்றும் திஷா பட்டாணியும் Project K திரைப்படத்துல நடிக்கிறாங்க. உலகநாயகன் கமல்ஹாசன் Project K படத்துல நடிக்கிறதா புது அப்டேட் வெளியாகியிருக்கு.

Project K ஒரு science fiction திரைப்படம். இந்த படம் மிக பெரிய பட்ஜெட்ல தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள்ல வெளியாகபோகுது. இந்த படம் மூலமா கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் அஸ்வனி தட் 50 வருடம் கழிச்சி இணையிறாங்க.

கமல்ஹாசன Project K படக் குழுவுக்கு வரவேற்கிற விதமா அமிதாப் பச்சன் அவருடைய ட்விட்டர் பக்கத்துல, "Welcome Kamal .. great working with you again .. it’s been a while ! #TheKsurprise @ikamalhaasan #ProjectK" அப்டின்னு பதிவிட்டிருக்காரு.

Projeck K
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

உலகநாயகன் கமல்ஹாசனும் தன்னோட சமூக வளைதள பக்கத்துல, "தயாரிப்பாளர் அஸ்வினி தட் கூட இணைஞ்சு 50 வருடம் கழித்து பணியாற்றுறது ரொம்ப மகிழ்ச்சி. 50 வருடங்களுக்கு முன்னாடி நான் நடன கலைஞராவும் அவரு துணை இயக்குனராகவும் இருந்தோம். இப்போ 50 வருஷம் கழிச்சு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பணி செய்ய போறோம்."

"அதுவும் எங்களுக்கு அடுத்த சந்ததிய சேர்ந்த ஒரு புத்திசாலியான இயக்குனர் கிட்ட. இந்தப் படத்துல என் சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன்னும் இயக்குனர் சந்ததிய சேர்ந்தவங்க தான். நான் அமிதாப் ஜி கூட இதுக்கு முன்னாடி நடிச்சிருக்கேன். ஆனாலும் ஒவ்வொரு முறை நடிக்கும்போதும் புதுசாயிருக்கும். ஒவ்வொரு முறையும் தன்ன தானே புதுப்பிக்கக் கூடியவரு தான் அமிதாப் ஜி."

Projeck K
'தெலுங்கு சினிமா vs தெலுங்கு அரசியல்' - டைம்பாஸ் மீம்ஸ்

"Project K திரைப்படத்துக்கு நான் ஆவலா காத்துகிட்டிருக்கேன்.‌ திரைப்படங்கள்ல என்ன பார்த்து ரசிக்கக்கூடிய ரசிகர்கள் என்ன எப்படி நினைச்சிருந்தாலும், நான் முதல்ல ஒரு திரைப்பட ரசிகன். புராஜெக்ட் கே'க்கு என்னுடைய முதல் கைதட்டல். இயக்குனர் நாக் அஸ்வினுக்கு, தொலைநோக்கு பார்வையால, நம் நாட்லயும், சினிமா உலகுலயும் கைதட்டல் எதிரொலிக்கும்னு நான் நம்புறேன்" அப்டின்னு கமல்ஹாசன் அவரோட அறிக்கையில தெரிவிச்சிருக்காரு.

Project K ஜனவரி 12, 2024 அன்னிக்கு தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள்ல திரையரங்குகள்ல வெளியிட திட்டமிட்டிருக்காங்க‌.

Projeck K
Lovers day : காதலால் இணைந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com