போலீஸ் சினிமா செய்வது எப்படி?

இரண்டுவகை பெண் காவலர்கள்தான். ஒருடைப் கருப்பாக குண்டாக இருக்கிற கெட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் குடிப்பவராக பான்பராக் போடுபவராக இருப்பார். ஒருமுறை கூட மோசமான பெண் போலீஸ் வெள்ளையாக இருக்கமாட்டார்.
போலீஸ்
போலீஸ் டைம்பாஸ்
Published on

சமீபத்தில் போலீஸ் படம் ஒன்றைப் பார்த்தேன். போலீஸ் படங்களுக்கென்றே அளவெடுத்து தைத்த சம்பிரதாய சட்டைகள் அத்தனையும் ஒன்றுகூட மிஸ்ஸாகிவிடாமல் நிறைந்திருந்தன. இந்தப்படம் மட்டுமல்ல சினிமா போலீஸுக்கென்று ஓர் இலக்கணம் உண்டு.

1. டீகிளாஸ்களோடு நுழைகிற பையன். அவனை பின்தொடரும் கேமிரா, ஸ்டேஷன் அறிமுக காட்சி. அவன் ஒவ்வொரு டேபிளாக டீ கொடுத்தே தீரவேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை அரசாங்கமே ஒழித்துக்கட்டினாலும் டீகிளாஸ் பையன் மட்டும் காவல்நிலையத்துக்கே வேலைக்கு சென்றுகொண்டே இருக்கிறான். காவல்நிலையத்தில் யாருக்குமே அது உரைப்பதில்லை. நமக்கும்தான்.

அந்த பையன் எப்போதும் அதே பழுப்பு நிற கையில்லா சல்லடையான ஓட்டை பனியன்தான்! அவனுடைய பணிகளில் முக்கியமானது ஸ்டேஷனில் இருக்கிற பாத்திரங்களை ஆடியன்ஸுக்கு அறிமுகப்படுத்துதல். சில நேரங்களில் அந்தப்பையனே நாயகனுக்கு துப்பு துலக்க உபயோகப்படுவான். அந்தப்பையனை ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்கவேண்டும் என யாருக்குமே எண்ணம் வரலை.

போலீஸ்
இந்த கால டெக்னாலஜிகள் Black & white சினிமா காலத்தில் இருந்திருந்தால்?

2 . நல்ல ரைட்டர். இவரு போலீஸ் ரைட்டர். இவர் ஒரு நல்ல குணம் கொண்ட வயதான ஏட்டு லெவல் சீனியராக இருப்பார். காதோரம் நரைத்து கண்ணாடி போட்டிருப்பார். சாதுவாக பட்டை போட்டுக்கொண்டு சோப்ளாங்கியாக நோஞ்சானாக இருப்பார். பெரும்பாலும் அவருக்கு ரிட்டையர்மென்ட்டுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கும். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு ஒட்டுமொத்த ஸ்டேஷனும் கொடூரமானவர்களால் நிறைந்திருக்கும்.

சார் இது தப்பு சார் வேண்டாம் சார், இத்தனை வருஷத்துல இதையெல்லாம் பாத்து பாத்து மரத்துப்போயிடுச்சுப்பா… ரிடையர் ஆகறதுக்குள்ள ஒருவாட்டியாச்சும் இந்த உடுப்புக்கு நேர்மையா நடந்துடணும் என அவருக்கு வசனங்கள் வரிசையாக இருக்கும். அவருடைய பர்ப்பஸ் நாயகனுக்கு உதவப்போய் உயிரையே கொடுப்பது. உயிரை விடுவதற்கு முன்பு கூட கடமைதவறாமல் நாயகனுக்கு சல்யூட் வைப்பது. ஒரே ஒருமுறை தன் உயர் அதிகாரியை எதிர்த்துபேசிவிட்டு கடமை ஆற்றி நாயகனுக்கு உதவுவது.

3. கொடூரமான இன்ஸ்பெக்டர். அவர் அர்த்த ராத்திரியில் சட்டை போடாமல் அல்லது எல்லா பட்டன்களையும் கழட்டிப்போட்டுவிட்டு பனியனோடு வியர்க்க வியர்க்க அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் நியூஸ்பேப்பரில் பந்திவைத்த ஒரு பிரியாணி பொட்டலம் கட்டாயம் இருக்கவேண்டும். அதில் கட்டாயம் லெக்பீஸ் இடம்பெறும். அள்ளி அள்ளி பிரியாணி தின்றபடிதான் அமர்ந்திருப்பார். அவர் பிரியாணி திங்கும்போதுதான் அந்த பாவப்பட்ட புகார் கொடுப்பவர் வந்து நிற்பார்.

போலீஸ்
'எனக்கு சினிமா சரிப்பட்டு வராது' - ரஜினி சொன்னதன் பின்னணி - பழைய பேப்பர் கடை | Epi 10

பாதி பிரியாணியை வாயில் வைத்துக்கொண்டே ம்ம் என்ன என்று மிரட்டினாலே நமக்கு தெரிந்துவிடும் இவரு பயங்கரமான வில்லன் போலடோய் என்று. மழை பெய்யும் நள்ளிரவுகளில் அவர் அவராகவே இருக்கமாட்டார், அந்த நேரம் பாத்துதான் பெண்கள் புகார் கொடுக்கவருவார்கள்.

4. கட்டாயம் இரண்டு காமெடி அக்யூஸ்டுகள் எப்போதும் லாக்அப்பில் இருப்பார்கள். அவர்கள் கட்டாயம் லுங்கி கட்டிக்கொண்டு குத்தவைத்துதான் அமர்ந்திருப்பார்கள். பேன்ட் போட்ட யாரும் குற்றம் செய்வதில்லை. அந்தகாலத்தில் ஓகே இப்போதும் கூட இதே டைப் லுங்கி குற்றவாளிகள்தான்.

இந்த குற்றவாளிகள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருப்பார்கள். நன்றாக ஆறுதல் சொல்லுவார்கள், ஸ்டேஷனில் இருக்கிற மற்ற போலீஸ்கார்ர்களோடு ஹவுஸ் ஓனரிடம் பேசுவது போல உரிமையாக பேசுவார்கள். சிலநேரங்களில் முக்கிய குற்றவாளியிடமிருந்து உண்மையை வாங்குவதற்காக இவர்கள் அடிபடுவார்கள்.

5. ஐஜி அல்லது கமிஷனர். அவருடைய ஒரே வேலை, நாயக இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு மேலிடத்து உத்தரவை சொல்லி மிரட்டுவதுதான். நீ தேவையில்லாம இந்த கேஸ்ல தலையிடாத, நீ இனிமே இந்த கேஸ் பாக்க வேண்டாம், என்னைய்யா நினைச்சிட்டிருக்க உன் மனசுல நீ பாட்டுக்கு ஆக்ஷன் எடுக்குற, அவன் or அவரு யாரு தெரியுமா என பத்து வசனங்களைதான் திரும்ப திரும்ப பேசுவார்.

போலீஸ்
'வடகொரிய அதிபர், ஒபாமா கோபம், மக்கள் எதிர்ப்பு' - ‘தி இன்டர்வியூ’ எனும் கொரிய சினிமா!

அச்சம்தான் அவருடைய அடிப்படையான எமோஷன். எல்லாத்துக்கு பயப்படுற இவர் எப்படி ஐஜி ஆனார் என்று டவுட்டு வரும். கிளைமாக்ஸில் அவர் துரோகி என்பது தெரியவரும் அல்லது அவர் திருந்தி நாயகனுக்கு உதவி செய்து நாயகனுக்கு விருது வழங்குவார்.

6. ஸ்டேஷனில் இரண்டுவகை பெண் காவலர்கள்தான். ஒருடைப் கருப்பாக குண்டாக இருக்கிற கெட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் குடிப்பவராக பான்பராக் போடுபவராக இருப்பார். அவர் எப்போதும் ஆண்களின் காலிடுக்கு பந்துகளை தவறாமல் உதைக்கிறவர். ஹேய் நான் பொம்பளைனு நினைச்சியா என்று கத்தி கேட்பார். ஒருமுறை கூட மோசமான பெண் போலீஸ் வெள்ளையாக இருக்கமாட்டார்.

7. இன்னொரு வகை ஒல்லிகுச்சியான வெளுத்த கான்ஸ்டபிள் பெண்கள். இவர்கள் நாயகனை காதலிக்கவே பிறந்தவர்கள். வேறெந்த வேலையும் பார்க்க மாட்டார்கள். தலையிலும் கூட குறுதிப்புனல் கமல் போல சைடுவாங்கின துணி தொப்பி போட்டிருப்பார்கள். பாவப்பட்ட நாயகிக்கான கோட்வோர்ட் அந்த தொப்பிதான். நாயகனுக்கு காவல்நிலையத்தில் இருந்து எதாவது தகவல்களை கொடுத்து உதவி செய்வார்கள்.

ஸ்டேஷனில் நடக்கும் அநீதிகளை கண்டு எதுவும் செய்யமுடியாமல் மனம் வெதும்பி இரண்டாவது பாராவில் வருகிற அந்த வயதான நல்ல ரைட்டரிடம் புலம்புவார்கள். அவருடைய கற்புக்கு எந்த நேரத்திலும் சீனியர்களால் ஆபத்து நேரலாம் என்கிற சஸ்பென்ஸ் இருக்கும்.

போலீஸ்
'ராஜ்கிரண் என்றாலே நினைவுக்கு வருவது எது?' - தமிழ் சினிமா குவிஸ்

8. ஹீரோ நேர்மையான போலீஸாக இருந்தால், அவருக்கு துணையாக அதே கேடரில் இன்னொரு மத்திய வயது போலீஸ் இருப்பார். அவர் யாரென்றால் சின்ன வயதில் வீராவேசத்தோடு கடமையாற்ற வந்து இந்த சிஸ்டத்தால் பாதிக்கப்பட்டு எல்லா போலீஸ் மாதிரியும் ஆகி தன் வாழ்க்கையை தொலைத்தவராக இருப்பார். இந்த சிஸ்டத்தை மாத்தமுடியாதுப்பா, இங்கே எதுவுமே மாறாது என மனம் நொந்து பேசுவார். கடைசியில் நாயகனுடைய திறமையை பார்த்து சல்யூட் அடித்து தன் உயிரையே கொடுத்து தியாகம் பண்ணுவார். இவரு இல்லாம போலீஸ் படமே எடுக்கமுடியாது.

9. போலீஸ் ஹீரோ கூலான ஆளாக காட்ட எளிதான வழி அவர் வாயில் பபிள்கம் போட்டு பசுமாடுபோல மெல்லவிடுவது. அதை படம் முடியும்வரை துப்பவிடக்கூடாஉ. அவர் எப்போதும் டிஷர்ட் ஜீன்ஸில் குளிர்கண்ணாடி அணிந்திருப்பார். ஆர்ம்ஸ் தெரியும்படி டைட் டிஷர்ட் நல்லது. அவர் எப்போதுமே யுனிபார்மே போடமாட்டார். அவருக்கு துணையாக வருகிற போலீஸ் பேன்ட் மட்டும் காக்கி போட்டிருப்பார்.

ஊடகவியலாளர் அதிஷா வினோத்தின் முகநூல் பதிவு.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com