Chandramukhi 2 Review : சந்திரமுகி + முனி = சந்திரமுனி - பேயிக்கும் பேயிக்கும் சண்டைனா இதான் போல !

சந்திரமுகி 'ஜோதிகா'விடம் இருந்த நடனம், நடிப்பு, ஆக்ரோஷமான கண்கள் என பல விஷயங்கள் கங்கனாவிடம் மிஸ்ஸிங். சந்திரமுகியின் ஆவியும் வேட்டையனின் ஆவியும் வெளியே வந்து மோதுகின்றன.
Chandramukhi
Chandramukhi timepass
Published on

கதைச்சுறுக்கம்:

ராதிகாவின் குடும்பத்தில் அடுத்தத்து அசம்பாவிதங்கள் நடப்பதால், அவர்களின் குலத் தெய்வ கோயிலுக்கு குடும்பத்தோடு போகிறார்கள். அப்போது இவர்களுடன் ராகவா லாரன்ஸும் போகிறார். அந்த ஊரில் இருக்கும் 'வேட்டையராஜா'வின் அரண்மனையில் தங்குகிறார்கள். இதனால் சந்திரமுகியின் ஆவியும் வேட்டையனின் ஆவியும் வெளியே வருகிறது. இதற்கு பிறகு இரண்டு ஆவிகளுக்கு மோதிக்கொள், அதனால் நடக்கும் களேபரங்கள்தான் இந்த சந்திரமுகி 2.

ப்ளஸ்:

பாண்டியன், செங்கோட்டையன் என இரண்டு வேறு வேறு கதாபாத்திரத்தில் வந்து நம்மை கலகலப்பாக்குகிறார் லாரன்ஸ்.

சந்திரமுகி ஒன்றாம் பாகத்தில் வரும் அதே அரண்மனையை மீண்டும் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். கலை இயக்குநர் தோட்டா தரணி. 90ஸ் கிட்ஸுகளுக்கு ஒரு நல்ல ரீவைண்ட்டாக இருக்கும்.

ஓப்பனிங்கில் வரும் சண்டைக்காட்சி பக்கா.

சந்திரமுகியும் அவளது காதலனும் ஆடும் 'ரா ரா' ரீகிரியேஷன் பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது.

Chandramukhi
Iraivan Review : கசாப்பு கடையா Crime thriller ரா? - நம்மை இரக்கமில்லாமல் அறுக்கும் இறைவன் !

மைனஸ் :

பேய் படங்களுக்கே உண்டான அதே டெம்ப்ளட் கதைக்கரு, திரைக்கதை என போரடிக்க வைக்கிறது.

சந்திரமுகி 'ஜோதிகா'விடம் இருந்த நடனம், நடிப்பு, ஆக்ரோஷமான கண்கள் என பல விஷயங்கள் கங்கனாவிடம் மிஸ்ஸிங்.

'ராரா' வெர்ஷனை தவிர மற்ற பாடல்கள் நம்மை சோதிக்கிறது. ஆஸ்கர் வாங்கிய கீரவாணியா இவர் என கேட்க வைக்கிறது.

சந்திரமுகி ஒன்றாம் பாகத்தில் 'வடிவேலு - ரஜினி', 'வடிவேலு - நாசர்' என பல காம்போக்களில் வந்து நம் வயிற்றைப் புண் ஆக்கிய வடிவேலு, இந்தப் பாகத்தில் தனியாளாக வந்து நம் காதுகளைப் பதம் பார்க்கிறார்.

காமெடியும் இல்லாமல் பயமும் காட்டாமல் முதல் பாதி பயணிக்க, இரண்டாம் பாதியின் திரைக்கதையோ பயங்கர குழப்பமாக பயணித்து நம்மை சோதிக்கிறது.

ராதிகா, வடிவேலு, சுரேஷ் மேனன், லட்சுமி மேனன் என நல்ல நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்கு என அழுத்தமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்படவில்லை.

முடிவு:

ஆக மொத்தத்தில், இந்தப் பாகம் சந்திரமுகி + முனி = சந்திரமுனி.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் சினிமா விமர்சனங்களைப் படிக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Please Click : https://bit.ly/3Plrlvr

Chandramukhi
Tamil Cinema : வித்தியாசமான தமிழ் சினிமா வில்லன்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com