
பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் பதான் படம் சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் புதன் கிழமை திரையரங்குகளில் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் ஆகியோர் நடிப்பில், உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது பதான். இந்த நிலையில் ஷாருக்கின் ‘பதான்’ படம் ஓப்பனிங் நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
உலக அளவில் முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து, ஒரு மாஸான ஓப்பனிங்கைப் பெற்றது. சினிமா வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் , "பதான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில், இந்திய அளவில் 55 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஷாருக்கான் 4 வருடத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளதால், பதான் படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் வேகமாக விற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை உட்பட நாடு முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் பதான் வெளியிடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியால், கூடுதலாக 300 தியேட்டர்களில் பதான் திரையிடப்பட்டது.
உலக அளவில் மொத்தம் 8,500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது. விடுமுறை அல்லாத நாளில் வெளிவந்து முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய சாதனையையும், இந்தியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்ட படம் என்ற பெருமையையும் பதான் பெற்றுள்ளது.
பதான் படம் திரையிடப்பட்ட முதல் நாளில் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தி திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தொடக்க நாளில் வசூல் வேட்டையை நடத்திய பதான் படம், டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இடங்களில் மொத்தம் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளது.
பதான் படம் இந்தியாவில் முதல் 3 நாளில் ரூ.150 கோடிக்கு வசூலித்தது. உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலாகியுள்ளது.
இந்திய அளவில் பதான் பட வசூல்:
1வது நாள் -- ரூ.57 கோடி
2வது நாள் -- ரூ.70.50 கோடி
3-வது நாள் -- ரூ.36 கோடி
4வது நாள் -- ரூ.52 கோடி
உலக அளவில் பதான் பட வசூல்:
1வது நாள் -- ரூ.100 கோடி
2வது நாள் -- ரூ.100கோடி
3-வது நாள் -- ரூ.157 கோடி
4வது நாள் -- ரூ.400 கோடி
உலகளவில் பதான் இதுவரை 400 கோடியை வசூல் செய்துள்ளது.